Samsung இன் அறிவிப்பு
Samsung நிறுவனமானது புதிய தொலைபேசிகளை பயன்படுத்துவதில் ஆர்வமுள்ளவர்களுக்கான நற்செய்தியொன்றை கடந்த திங்கட்கிழமை விடுத்தது. சாதாரணமாக பயன்படுத்தும் தொலைபேசியானது அளவில் பெரிதானால் எப்படியிருக்கும். ஆம். அந்த வாய்ப்பைத்தான் தருகின்றது Samsung இரண்டுமுறை விரிக்கின்ற போது 10 இன்ச் அளவிலானதாக விரியக் கூடிய மெலிதான Galaxy Z Tri Fold தொலைபேசி பற்றிய அறிவிப்பைத் தான் Samsung விடுத்திருக்கின்றது.
Galaxy Z Tri Fold
நீண்ட காலம் எதிர்பார்க்கப்பட்ட Galaxy Z Tri Fold தொலைபேசியானது எதிர்வரும் 12-ம் தேதி தென்கொரியாவில் விற்பனைக்கு விடப்பட இருக்கின்றது அதனைத் தொடர்ந்து சீனா தாய்வான் சிங்கப்பூர் ஐக்கிய அரபு இராச்சியம் போன்ற இடங்களிலும் இது விற்பனைக்கு விடப்பட இருக்கின்றது. 2026 காலாண்டில் ஐக்கிய அமெரிக்காவில் இது சந்தைப்படுத்தப்பட இருக்கின்றது
சிறப்பம்சங்கள்
16 GB நினைவகத்தையும் 512 GB சேமிப்பகத்தையும் கொண்ட இது கொரிய மதிப்பில் 3594,000 வொன் பெறுமதி ஆனது. இது ஐக்கிய அமெரிக்க டொலரில் 20049 டொலர் பெறுமதியானதாகும். இரண்டு மடிப்புக்களைக் கொண்ட இதனை மூன்று பகுதிகளாக மடிக்கலாம். மடித்திருக்கும் போது இது அளவு மெல்லியதாகும். இதனுடைய திரையானது 10 இன்ச் அளவிலான Dynamic AMOLED 2X திரையாகும். இதனுடைய பின்பக்க கமராக்களுள் 200MP Wide என்பது பிரதானமானதாகும்.12MP Ultra Wide, 10 MP 3X Optical Zoom போன்றனவும் இதன் ஏனைய கமராக்களாகும். அத்துடன் 10 MP செல்பி கமராவையும் இது கொண்டுள்ளது. 5600 mAh Batteryயையும் 45W Wired 15W Wireless charging வசதியையும் இது கொண்டுள்ளது. மூன்று Applicationகளை பக்கத்து பக்கத்தில் Portraitவடிவத்தில் பயன்படுத்தும் வசதியையும் அண்மையில் பயன்படுத்திய விடயங்களைக் கொண்டதான Taskbar வசதியையும் இது கொண்டுள்ளது.
முடிவாக..
ஒரே சாதனத்தை போன்ற பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துபவர்களுக்கு இந்த தொலைபேசியானது பொருத்தமானதாகும்.


.jpeg)


.jpeg)