How to Create a Website? Complete Beginner Guide in Tamil (2026)

அறிமுகம்

இன்றைய காலப்பகுதி இணையத்தளங்கள் ஆக்கிரமித்திருக்கின்ற ஒரு காலப்பகுதியாகும். நம்மில் அநேகமானோருக்கு இணையத்தளம் ஒன்றை உருவாக்குவதில் ஆர்வம் இருக்கும். இணையத் தளங்களை உருவாக்குவதற்கு பல்வேறு வழிகள் காணப்படுகின்றன. அவ்வாறான வழிகளைப் பற்றி இந்த கட்டுரையில் நாம் பார்க்கலாம். 


இணையத் தளங்களை உருவாக்கும் முறைகள் 

இணையத் தளங்களை உருவாக்கும் முறைகளை இலகுவான முறையிலிருந்து கடினத் தன்மையான முறை என்ற அடிப்படையில் இந்தக் கட்டுரையில் நான் நான்காகப் பிரித்துள்ளேன்.

01. Website Builder மூலம் இணையத்தளங்களை உருவாக்குதல்.

02. Web Authoring Tool/ Website Editor மூலம் இணையத்தளங்களை உருவாக்குதல்.

03. CMS மூலம் இணையத்தளங்களை உருவாக்குதல்.

        i. Hosted CMS மூலம் இணையத்தளங்களை உருவாக்குதல்.

        ii. Self Hosted CMS மூலம் இணையத்தளங்களை உருவாக்குதல்.

04. Coding மூலம் இணையத்தளங்களை உருவாக்குதல்.

இனி மேற்கூறிய முறைகள் நான்கையும் விரிவாகப் பார்க்கலாம்.

01. Website Builder மூலம் இணையத் தளங்களை உருவாக்குதல்.

எந்த விதமான Code ஐயும் பயன்படுத்தாமல் Drag and Drop மற்றும் எளிமையான ஏனைய முறைகளைப் பயன்படுத்தி விரைவாகவும் எளிதாகவும் இந்த முறை மூலம் நாம் இணையத்தளங்களை உருவாக்கலாம். இதற்காக இந்த வசதியை வழங்கும் இணையத் தளத்திற்கு சென்று நமக்குரிய கணக்கை உருவாக்க வேண்டும். பின் அதில் நமது இணையத் தளத்தை உருவாக்கி பக்கங்களை சேர்த்து நிறங்கள், Theme, Template போன்றவற்றை தெரிவு செய்து எமது இணையத்தளத்தை வெளியிடலாம். Wix.com, Squarespace.com போன்ற இணையத் தளங்கள் இந்த வசதியை வழங்குகின்றன. 

கீழே காட்டப்படுவது Wix.com இணையத்தளமாகும்.


கீழே காட்டப்படுவது Wix.com இல் Login செய்த பின்னர் காணப்படும் இடைமுகப்பாகும். 

கீழே காணப்படுவது நான் இந்த Wix.com இல் மாதிரிக்காக உருவாக்கிய ஒரு பக்க இணையத் தளமாகும். (One Page Website)

இந்த இணையத் தளத்தில் இலவசமாக இணையத் தளங்களை உருவாக்கலாம். நாம் உருவாக்கும் இணையத்தளத்திற்கான முகவரியானது ஆரம்பத்தில் Sub Domain ஆகக் காணப்படும். நாம் விரும்பினால் பின்னர் எமது இணையத் தளத்திற்கான முகவரியை வாங்கி எமது இணையத் தளத்துடன்  இணைக்க வேண்டும். 

Blogger ஐயும் இந்த வகைக்குள் சேர்க்க முடியும். எனினும் தனியே நாம் அதனை மற்றொரு வகையான CMS வகைக்குள் பார்க்கவுள்ளோம். 

02. Web Authoring Tool/ Website Editor மூலம் இணையத்தளங்களை உருவாக்குதல்.

இம்முறையானது ஆரம்பத்தில் மிகப் பரவலாகக் காணப்பட்ட இணையத் தளங்களை உருவாக்கும் முறைகளில் ஒன்றாகும். இவை Offline இல் இணையத்தளங்களை உருவாக்கும் மென்பொருட்களாகும். இந்த மென்பொருட்களின் மூலமாக இணையத்தளங்களை உருவாக்கிய பின்னர் Server இற்கு இணையப் பக்கங்களை தரவேற்றம் (Upload) செய்ய வேண்டும். Adobe Dreamweaver, Sea Monkey, Microsoft Front Page போன்றவை அவ்வாறான மென்பொருட்களாகும். 

ஆரம்பத்தில் எனக்குப் பிடித்த இணையத்தள உருவாக்க மென்பொருட்களுள் Dreamweaver உம் ஒன்றாகும்.  நேரடியாக Visual Design Mode முறையில் இணையப் பக்கங்களை உருவாக்கும் வசதியும் Coding மூலம் இணையப்பக்கங்களை உருவாக்கும் வசதியும் இதில் காணப்படுகின்றது. Offline இல் இணையத்தளத்தை உருவாக்கி பின்னர் Hosting இற்கு தரவேற்றம் செய்யும் வசதியும் காணப்படுகின்றது. எமது தகவல்களை வழங்கி நேரடியாக Hosting இல் கோப்புக்களை உருவாக்க, மாற்றம் செய்ய, அழிக்க முடியும். 

Microsoft Front Page இல்  WYSIWYG (What You See Is What You Get) எனும் முறையில் இணையப்பக்கங்களை உருவாக்க முடியுமாக இருந்தது. Microsoft Word இல் ஆவணங்களை உருவாக்குவது போல் இதில் இணையப் பக்கங்களை உருவாக்க முடியும். ஆனால் Microsoft Front Page ஆனது 2003 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் இல்லாமல் போனது. 

SeaMonkey இலும் இலகுவான முறையில் நாம் இணையத்தளங்களை உருவாக்க முடியும். Sea Monkey இல் இணையத்தள உருவாக்கி (Composer), Browser , Email Client ஆகியவை ஒன்றாக காணப்படுகின்றன. Sea Monkey யை எமது கணினியில் நிறுவிய பின்னர் திறக்கின்ற போது Browser தான் முதலில் திறக்கும். அதில் File இற்கு சென்று New என்பதனைக் க்ளிக் செய்து Composer Page என்பதை தெரிவு செய்கின்ற போது இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கான இடைமுகப்பு காட்சியாகும். 

கீழே காணப்படுவது Sea Monkey இல் நாம் இணையப் பக்கமொன்றை உருவாக்குவதற்காக வழங்கப்படுகின்ற இடை முகப்பாகும்.


 கீழே காணப்படுவது Sea Monkey இல் எளிதான முறையில் நான் இணையப் பக்கமொன்றை உருவாக்கிய முறையாகும்.
நான் உருவாக்கிய இணையப் பக்கமானது Browser இல் கீழே உள்ளவாறு காட்சியளிக்கும். 

03. CMS மூலம் இணையத்தளங்களை உருவாக்குதல்.

இந்தப் பகுதியில் நாம் CMS என்றால் என்ன என்பதனைப் பார்த்து விட்டு அதன் பிரிவுகளைப் பார்ப்போம். CMS (Content Management System / உள்ளடக்க முகாமைத்துவ மென்பொருள்) எனப்படுவது இணையத் தளமொன்றிலுள்ள பதிவுகள் (Posts), பக்கங்கள்(Pages), படங்கள் (Images), காணொளிகள் (Videos), Themes போன்றவற்றை நிருவகிக்க உதவும் மென்பொருள் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம். இதில் இலகுவாக இணையத்தளங்களை உருவாக்கலாம். பின்னர் பதிவுகளை உருவாக்கி அதற்குத் தலைப்பைக் கொடுத்து பதிவு என்ன வகையானது போன்ற தகவல்களைக் கொடுத்து பதிவை வெளியிட (Publish ) முடியும். நாம் உருவாக்கிய இணையத்தளத்திற்குரிய நிறங்கள், Themes போன்றவற்றையும் நாம் மாற்றலாம். Plugins/ Addons போன்றவற்றை நிறுவி நாம் புதிய வசதிகளைச் சேர்க்கலாம். 

Content Management System மென்பொருளை நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம். அதில் முதலாவது Hosted CMS.  இரண்டாவது Self Hosted CMS . இவ்விரண்டு முறை மூலம் இணையத்தளங்களை உருவாக்கும் விதத்தை நாம் இப்போது பார்ப்போம்.  

i. Hosted CMS மூலம் இணையத்தளங்களை உருவாக்குதல்.

இம்முறையில் குறிப்பிட்ட CMS மென்பொருளை தரவிறக்க வேண்டியதில்லை. CMS வசதியை வழங்கும் இணையத்தளத்திற்குச் சென்று நமக்கு ஒரு கணக்கை உருவாக்கி அதில் நமது இணையத்தளத்தை உருவாக்க முடியும். பின்னர் நமக்குத் தேவையான மாற்றங்களை செய்து புதிய பதிவுகளை (Posts) உருவாக்கி வெளியிட முடியும். Blogger.com, Wordpress.comபோன்றவை Hosted CMS வசதியை வழங்குகின்றன. 

www.blogger.comஇற்குச் சென்று எமது Gmail முகவரியை வழங்கி இந்த இணையத்தளத்தினுள் உட்புக முடியும். அதில் தேவையான தகவல்களை வழங்கி எமக்குரிய இணையத்தளம் ஒன்றை உருவாக்கிக் கொள்ள முடியும். 

Blogger இல் பதிவொன்றை உருவாக்குவதற்குரிய இணையப் பக்கம் கீழே காணப்படுகின்றது. 
Blogger இல் எமது இணையத்தளத்தின் முகவரி yourwebsite.blogspot.com  என்பதாகக் காணப்படும். நாம் விரும்பினால் பின்னர் நமக்குரிய இணைய முகவரி ஒன்றை வாங்கி எமது இணையத்தளத்துடன் இணைத்துக் கொள்ள முடியும். 
Blogger இன் Admin Panel இல் பதிவுகள் காணப்படும் விதம் கீழே காட்டப்பட்டுள்ளது.

எமது உலகவலம் (www.ulahavalam.com) இணையத்தளமும் Blogger இல் உருவாக்கப்பட்டு சொந்தமாக இணைய முகவரி (Custom Domain Name) வாங்கி Blogger உடன் இணைக்கப்பட்டுள்ளது.

    ii. Self Hosted CMS மூலம் இணையத் தளங்களை உருவாக்குதல்.

இந்த முறையில் நாம் CMS மென்பொருளை அதனுடைய இணையத்தளத்திற்கு சென்று தரவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் எமது இணையத்தளத்தினை சேமிப்பதற்காக நாம் கொள்வனவு செய்து வைத்துள்ள Hosting இல் CMS மென்பொருளை நிறுவ வேண்டும். நிறுவிய பின்னர் எமது இணையத் தளத்தினை உருவாக்கி உள்ளடக்கங்களை தரவேற்றி பராமரிக்க முடியும். Wordpress, Joomla, Drupal போன்ற மென்பொருட்களை நாம் எமது Hosting இல் நிறுவி இணையத்தளங்களை உருவாக்க முடியும். Self Hosted CMSஇல் இரண்டு முறைகளில் CMS இனை நாம் நிறுவ முடியும். 

அதில் முதலாவது முறை Hosting இல் நாமே நேரடியாக CMS இனை நிறுவுவதாகும். இதற்கு நாம் CMS இனை அதனுடைய இணையத் தளத்திற்குச் சென்று தரவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் தரவிறக்கிய CMS மென்பொருளை Hosting இல் தரவேற்றம் செய்ய வேண்டும். அப்போது  தேவையான விபரங்களை வழங்கி எமது இணையத்தளத்தினை உருவாக்கிக் கொள்ளலாம். பின்னர் அதில் எமது உள்ளடக்கங்களை / பதிவுகளை உருவாக்கி வெளியிடலாம். 

இரண்டாவது முறையானது நாம் CMS களை ஒரு க்ளிக்கில் நிறுவும் வசதி (One Click Installation) . எங்களுக்கு இணையத் தளத்திற்கான இடவசதியை வழங்கும் நிறுவனம் (Hosting) ஒரு Click இல் CMS இனை நிறுவும் வசதியை வழங்கியிருக்கும். நாம் அந்த இணையத்தளத்திற்குச் சென்று ஒரு Click இல் CMS இனை எமது Hosting இல் நிறுவிக் கொள்ளலாம். பின்னர் எமது தேவைக்கேற்ப இணையத்தளத்தினை உருவாக்கி அதற்கு உள்ளடக்கங்களை சேர்த்து வெளியிடலாம். 

மற்றுமொரு விடயத்தினையும் இவ்விடத்தில் குறிப்பிட்டாக வேண்டும். CMS இனை எமது கணினியிலும் நிறுவி பயன்படுத்த முடியும். அதற்கு XAMPP, WAMP போன்ற ஏதாவதொரு மென்பொருளை எமது கணினியில் நிறுவ வேண்டும். பின்னர் தரவிறக்கி வைத்திருக்கும் CMS இனை அதில்  நிறுவ வேண்டும். அதன் பின்னர் எமது இணையத்தளத்தினை உருவாக்கிப் பார்க்க முடியும். கணினியில் எமது இணையத்தளத்தினை CMS மூலமாக உருவாக்குவதற்கு இது சிறந்த முறையாகும். 


சில பிரபல நிறுவனங்கள் தங்களுக்கேயுரியை தனிப்பட்ட CMS இனைப் பயன்படுத்துகின்றன. BBC, The New York Times, Netflix, Amazon, Facebookபோன்றனவே அவையாகும். Facebook ஆனது ஒரு சமூக வலைத்தளமாக இருந்தாலும் அதுவும் ஒரு வகையான CMS என்று சொல்லப்படுகின்றது. 

04. Coding மூலம் இணையத் தளங்களை உருவாக்குதல்.

இம்முறை மூலம் இணையத் தளத்தினை உருவாக்குவதற்கு கணினி மொழிகளை நாம் அறிந்திருக்க வேண்டும். இந்த முறை மூலம் நமக்குப் விருப்பத்திற்கேற்ப இணையத்தளங்களினை உருவாக்க முடியும். CMS இல் அதிலுள்ள Theme, Design போன்றவற்றை மாத்திரம் பயன்படுத்த முடியும். அல்லது Themes போன்றவற்றை வேறு இணையத் தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து எமது CMS இணையத் தளத்தில் இணைக்க முடியும். எனினும் கணினி மொழிகள் மூலம் இணையத் தளத்தினை உருவாக்கும் போது நாம் விரும்பிய படி நமக்கு ஏற்றாற்போல் டிசைன்களில் இணையத் தளங்களை உருவாக்க முடியும். 

Coding மூலம் இணையத் தளங்களை உருவாக்குவதை நாம் இரண்டு வகையாகப் பிரிக்கலாம்.
i. Frontend Languages
ii. Backend Programming Languages

i. Frontend Technologies
Frontend எனப்படுவது இணையப் பக்கத்தில் Users பார்க்கும் பகுதியாகும். இந்தப் பகுதியை உருவாக்கும் மொழிகளாக HTML, CSS, JavaScript ஆகியவற்றை நாம் கூறலாம். 

HTML
இணையத் தளத்தினை உருவாக்குவதற்குப் பயன்படும் அடிப்படையான கணினி மொழி இதுவாகும். பொதுவாக இது இணையத்தளமொன்றின் Structure இனை உருவாக்க பயன்படுகின்றது. இணையத்தள வடிவமைப்பாளர்கள் கற்கும் போது இதனைத்தான் முதலில் கற்பார்கள். Static Website எனப்படுகின்ற நிலையான இணையத்தளங்களினை இந்த மொழி மூலம் உருவாக்கலாம். இவ்வகை இணையத் தளங்களில் இருப்பவற்றை மாத்திரம் பயனர்கள் பார்க்க முடியும். அதன் உள்ளடக்கங்களை பயனரால் மாற்ற முடியாது.

Notepad போன்ற ஏதாவது Text Editor இல் HTML Code களை எழுதி  .html எனும் Extensionடன் சேமித்து பின்னர் Browser இல் அந்தக் கோப்பினை திறந்து பார்க்க முடியும்.  HTML கட்டளைகளைக் கொண்ட கோப்பு ஒன்றினை Browser இல் திறக்கும் போது அதனை வாசித்து அதனை Browser Execute செய்கின்றது. HTML கோப்புகள் server இல் சேமிக்கப்பட்டிருந்தாலும் Browser இல் தான் Execute ஆகின்றன. இணையப் பக்கத்திலுள்ள HTML  கட்டளைகளுக்கேற்ப இணையப் பக்கத்தினை Browser ஆனது User இற்கு காட்சிப்படுத்துகின்றது. HTML  ஒரு markup language ஆகும்.

CSS (Cascading Style Sheet)
இது இணையப் பக்கத்தின் தோற்றத்துடன் தொடர்புடையது. இணையத் தளத்தின் Colour, Layout, Font போன்ற Design இனை வடிவமைப்பதற்கு இது பயன்படுகின்றது. HTML ஆவணத்துடன்  CSS கட்டளைகளை இணைக்க முடியும். HTML மூலம் Colour, Layout, Fontபோன்றவற்றை முகாமை செய்ய முடியுமாக இருந்த போதிலும் CSS மூலம் முகாமை செய்வது எளிதானது.  CSS ஒரு stylesheet language ஆகும்.

Java Script
எமது இணையத்தளத்திற்கு Buttons, Animations, validation போன்ற dynamic content மற்றும் interactive வான விடயங்களை சேர்ப்பதற்காக இந்த மொழி பயன்படுகின்றது. இம்மொழியினுடைய Codingகளையும் எமது HTML இணையத்தளத்தில் உள்ளீடு செய்து கொள்ள முடியும். Java Script மூலம் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகளுக்கு பின்வரும் உதாரணங்களைக் கூறலாம். Button click (ஒரு action நடக்கச் செய்தல்), Form (user input-ஐ validate செய்தல்), Image slider (images மாற்றுதல்), Menu button (mobile menu திறத்தல்), Page-ஐ முழுமையாக reload செய்யாமல் content மாற்றுதல், Error/message (user-க்கு உடனடி notification காட்டுதல்), Simple browser games உருவாக்குதல்.

ii. Backend Programming Languages

Backend Languages எனப்படுபவை Server இல் இயங்குபவை. இந்தப் பகுதிக்குரிய மொழிகளாக PHP, Python, Java, C#, JavaScript (Node.js),Ruby ஆகியவற்றை நாம் கூறலாம்.

PHP
dynamic web pages மற்றும் web applications உருவாக்க இந்த மொழி பயன்படுகிறது. இந்த மொழி Serverஇல் இயங்குகின்றது. இதனுடைய வெளியீடு HTML ஆக Browser இல் காட்சியாகும். Login மற்றும் registration systems, Form data processing, Database-இல் data சேமித்தல் / பெறுதல், User accounts நிர்வகித்தல் போன்ற செயற்பாடுகளையுடைய இணையத் தளங்களை உருவாக்க இம்மொழி பயன்படுகிறது. 

Python
Python என்பது பல்வேறு வகையான software மற்றும் applications உருவாக்கப் பயன்படும் ஒரு பொதுவான  மொழியாகும். Web development இலும் Python பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக Django மற்றும் Flask போன்ற frameworks மூலம் Websites மற்றும் Web applications உருவாக்க முடியும். இதற்கு மேலாக AI, Machine Learning, Data Science, Automation மற்றும் Desktop Applications போன்ற பல துறைகளிலும் Python பயன்படுத்தப்படுகிறது.

Java

Java என்பது ஒரு General Purpose, Object Oriented Programming Language ஆகும். இது Web development மட்டும் அல்லாமல் பல்வேறு வகையான Software மற்றும் Application களை உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது.

Web Development-ல் Java குறிப்பாக Backend மற்றும் Enterprise Web Applications உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. Spring மற்றும் Spring Boot போன்ற frameworks Java-based web development இல் பிரபலமாக உள்ளன. Java மொழி மூலம் பின்வருவனவற்றை உருவாக்கலாம். Web applications & backend systems, Enterprise Software, Android Applications, Desktop Applications, Cloud-Based Applications


C#

C# (C-Sharp) என்பது Microsoft உருவாக்கிய ஒரு general-purpose, object-oriented programming language ஆகும். இது web development மட்டும் அல்லாமல் பல்வேறு வகையான Applicationகளை உருவாக்கப் பயன்படுகிறது.

Web development-ல் C# முக்கியமாக ASP.NET / ASP.NET Core மூலம் backend மற்றும் web applications உருவாக்கப் பயன்படுத்தப்படுகிறது. C# மொழியானது பின்வரும் துறைகளில் பயன்படுத்தப்படுகின்றது. Web applications & backend systems, Enterprise applications, Desktop applications, Game development — குறிப்பாக Unity, Cloud applications

JavaScript (Node.js)
Node.js என்பது JavaScript-ஐ Server Side இல் இயக்க உதவும் Runtime Environment ஆகும். JavaScript என்பது முதலில் web browser இல் இயங்குவதற்காக பரவலாகப் பயன்படுத்தப்பட்ட Programming Language ஆகும். Node.js மூலம் JavaScript ஐ browser-க்கு வெளியேயும், குறிப்பாக server-side/backend இலும் இயக்க முடியும்.  இதன் மூலம் backend, APIs மற்றும் real-time web applications போன்றவற்றை உருவாக்க முடியும்.

Web development இல் Node.js பயன்படுத்தி பின்வருவனவற்றை உருவாக்க முடியும். Web servers மற்றும் web applications, APIs, Real-time applications (chat போன்றவை), Databases , Fast, scalable backend applications உருவாக்கலாம்

RUBY
Ruby என்பது பல்வேறு Software உருவாக்கப் பயன்படும் Programming Language ஆகும். Web development-ல் Ruby on Rails framework மூலம் websites மற்றும் web applications உருவாக்கப்படுகிறது. மூலம் பின்வருவனவற்றை உருவாக்கலாம். Web Applications & Backend development, Business Applications, Automation & Scripting, Software Development

இதுவரை Code மூலம் இணைத்தளங்களை உருவாக்கும் முறைகளைப் பார்த்தோம். இப்போது Coding இற்குத் துணையாகப் பயன்படுத்தப்படும் ஏனைய தொழினுட்பங்களையும் நாம் இந்தப் பிரிவில் பார்க்கலாம். Database, Frameworks, Library UI/UX designs, Code Editors / Development Tools போன்றனவே போன்றனவே அவ்வாறான தொழிநுட்பங்களாகும். 

Databases

எமது இணையத்தளத்தில் posts, products, orders, users போன்ற தரவுகளைச் சேமித்து நிர்வகிக்க Databases (தரவுத்தளங்கள்) பயன்படுத்தப்படுகின்றன.

தரவுத்தளங்களுடன் தொடர்புகொண்டு அவற்றில் உள்ள தரவுகளை நிர்வகிக்க பல்வேறு Query மொழிகள் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றுள் மிகவும் பரவலாகப் பயன்படுத்தப்படும் முக்கியமான Query மொழி SQL ஆகும்.SQL (Structured Query Language) என்பது குறிப்பாக Relational Database களில் உள்ள தரவுகளை தேடவும் (Query), சேர்க்கவும் (Insert), மாற்றவும் (Update), நீக்கவும் (Delete) பயன்படுத்தப்படும் ஒரு Database Query Language ஆகும்.

SQL மொழியைப் பயன்படுத்தி Relational Databases-ஐ உருவாக்கி நிர்வகிப்பவை RDBMS ஆகும். அவற்றுள் முக்கியமானவை பின்வருமாறு MySQL, PostgreSQL, MariaDB, SQL Server, Oracle Database.

MySQL - Relational DBMS
PostgreSQL - Relational DBMS
MongoDB - NoSQL / Document database system
MariaDB - Relational DBMS
SQLite - Embedded relational database engine
Microsoft SQL Server -
Oracle database -

Library and Frameworks
Programஎழுதுபவர்களின் வேலைகளை இலகுவாக்கும் வகையில் ஏற்கனவே எழுதப்பட்ட Code களின் தொகுப்பே Library  and Frameworks ஆகும். இவை இரண்டுக்குமிடையில் வேறுபாடுகள் காணப்படுகின்றன. 

Library
Library எனப்படுவது ஏற்கனவே எழுதப்பட்ட Codeகளின் தொகுப்பாகும். இணையத் தளமொன்றை உருவாக்குபவர் தனக்குத் தேவையான Library ஐ தனது இணையத்தளத்தில் சேர்த்துக் கொள்ள முடியும்.  அதாவது நமது தேவைக்கேற்ற  code ஐ எடுத்துப் பயன்படுத்துகிறோம். 
  • React -JavaScript Library
  • jQuery
  • Lodash

  • Framework 
    Framework (கட்டமைப்பு) என்பது ஒரு application அல்லது website-ஐ உருவாக்குவதற்கான முழுமையான development structure-ஐ வழங்குகிறது. Framework பொதுவாக application எவ்வாறு கட்டமைக்கப்பட வேண்டும் என்பதற்கான விதிமுறைகளையும் வழங்குகிறது. அதன் structure இற்குள் நமது application-ஐ உருவாக்குகிறோம். மேலும்  PHP இல் நீங்கள் இணையப்பக்கம் உருவாக்கினால் PHP இற்குரிய Frameworkகளைப் பயன்படுத்த வேண்டும். Python இல் நீங்கள் இணையப்பக்கம் உருவாக்கினால் Python இற்குரிய Frameworkகளைப் பயன்படுத்த வேண்டும். சில Framework களின் பெயர்கள் கீழே காணப்படுகின்றன. 

  • Laravel – PHP
  • Django – Python
  • Spring Boot – Java
  • ASP.NET Core – C#/.NET Framework
  • Angular – JavaScript/TypeScript -Frontend Framework
  • Vue – JavaScript
  • Bootstrap - CSS/Frontend Framework - HTML, CSS மற்றும் JavaScript உடன் Bootstrap பயன்படுத்தப்படலாம்.

  • UI/UX 
    இணையப் பக்கமொன்றின் வடிவமைப்பை செய்கின்ற தொழில்நுட்பங்களாக Figma, Adobe XD, Sketch, Canva ஆகியவற்றை நாம் கூறலாம். இணையப் பக்கம் ஒன்றிற்கு விஜயம் செய்கின்ற ஒரு பயனருக்கு அந்த இணையப் பக்கம் பயன்படுத்துவதற்கு எளிமையாகவும் கவர்ச்சியாகவும் அமையும் வகையில் தயாரிப்பதற்கு இவ்வகை மென்பொருட்கள் உதவுகின்றன. குறிப்பாக இணையப் பக்கத்தின் தோற்றம், வடிவமைப்பு, பயன்படுதன்மை, பயனர் அனுபவம் போன்றவற்றுடன் தொடர்புடையதாக இவை காணப்படுகின்றன. 


    Code Editors / Development Tools - 
    Code களை தட்டச்சு செய்தல், மாற்றுதல், தவறு நீக்கல் போன்றவற்றிற்குப் பயன்படுத்தப்படும் மென்பொருட்களே இவையாகும்.write, edit, debug, and manage source code. இணையப்பக்கங்களை வடிவமைப்பவர்கள் தங்களது Code களை உள்ளிடுவதற்கு ஒரு மென்பொருள் தேவையல்லவா? அதற்குத்தான் இந்த மென்பொருட்கள் உதவுகின்றன. 
    • Visual Studio Code
    • Sublime Text
    • Notepad++
    • Dreamweaver - ( Web Development Tool ஆன இந்த மென்பொருளானது இணையத்தளங்களை Design செய்வதற்குரிய வசதியையும் Code மூலம் இணையத்தளம் உருவாக்குவதற்குரிய வசதியையும் கொண்டிருக்கின்றது.  )
    Hosting
    Hosting எனப்படுவது எமது இணையத் தளங்களினை சேமித்து பயனர்கள் அந்த இணையத் தளங்களைப் பார்ப்பதற்கு வழி செய்யும் சேவையாகும். 

    ஏதோவொரு முறையில் நீங்கள் இணையத்தளத்தை உருவாக்கினாலும் அதனை மற்றவர்கள் பார்க்க வேண்டும். எனவே உங்கள் இணையத்தளத்தை Server இல் சேமிக்க வேண்டும். இந்த நேரத்திலேயே நாம் Hosting பற்றி யோசிக்க வேண்டியுள்ளது. Hosting எனப்படுவது நாம் உருவாக்கிய இணையத்தளத்தை சேமிப்பதற்கான இடத்தை தரும் இணையத் தளங்களாகும். Awardspace, bluehost, Godaddy போன்றவை அவ்வாறானவற்றுள் சிலவாகும்.  சில இணையத் தளங்கள் வரையறுக்கப்பட்ட இலவச இணையத்தள இடவசதிகளையும் தருகின்றன. 

    Custom Domain
    Hosting சேவையினை வழங்கும் நிறுவனங்கள் எமக்கு Subjomainஐ வழங்குகின்றன. எனினும் நமக்கென்று சொந்தமான இணைய முகவரியை(Custom Domain Name) வாங்குவதே பொருத்தமானதாக இருக்கும்.  சில வேளைகளில் Hosting இனை வழங்கும் இணையத் தளமே Custom Domain Registration செய்யும் சேவையையும் செய்யும். அவற்றிடம் நாம் இணையத்தளத்தினை சேமிப்பதற்கான இடத்தினையும்(Hosting Space) இணைய முகவரியையும் (Custom Domain) வாங்க முயும். இவ்வாறு வாங்கிய இணைய முகவரியை எமது இணையத்தள கணக்குடன் இணைத்து பயனர்கள் அந்த முகவரியினூடாக எமது இணையத் தளத்தினை அடைய வழி செய்ய வேண்டும். 

    கீழ்வரும் இணையத் தளங்கள் மூலமாக நாம் இணையத் தள விருத்தி சம்மந்தமாக அறிந்து கொள்ளலாம்.
    https://www.w3schools.com/
    https://coddy.tech/
    https://www.theodinproject.com
    https://www.freecodecamp.org
    https://scrimba.com
    https://www.frontendmentor.io

    இந்தக் கட்டுரையானது இணையத்தளங்களை உருவாக்கும் முறைகளையும் உருவாக்கிய இணையத்தளங்களை இல் தரவேற்றுதல் சம்மந்தமாகவும் இணைய முகவரி சம்மந்தமாகவும் மற்றும் இணையத்தள விருத்தி சம்மந்தமாக கற்றுக் கொள்வதற்கான இணையத் தள முகவரிகளையும் கொண்டிருக்கின்றது.


    கருத்துரையிடுக

    புதியது பழையவை