ட்விட்டர் சமூக வலைத்தளத்தின் பயனாளர்கள் (Users) 400 மில்லியன் பயனாளர்களின் கணக்குகள் துருவிகளினால் (Hackers) பெறப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ட்விட்டர் பயனாளிகளின் பெயர்கள், மின்னஞ்சல்கள், பின்பற்றுபவர்களின் பெயர்கள், தொலைபேசி இலக்கங்கள் ஆகியனவே இவ்வாறு துருவிகளினால் பெறப்பட்டு டார்க் வெப்பில்( Dark Web) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. தாம் பெற்ற தகவல்கள் உண்மை என்பதை நிரூபிப்பதற்காக தகவல்களின் ஒரு பகுதி துருவிகளின் குழுவில் (Hackers Forum) வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இந்திய நடிகர் சல்மான்கான், Alphabet பிரதம நிறைவேற்றுப் அதிகாரி (CEO) சுந்தர் பிச்சை, SpaceX நிறுவனம், ஜேம்ஸ் வெப் தொலைக்காட்டி (James Web Space Telescope) , இந்தியாவின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சு ஆகியவற்றின் ட்விட்டர் கணக்குகளின் விபரங்களும் துருவிகளினால் பெறப்பட்டுள்ளன.