இந்தியாவின் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் புதிய விமான சேவை இம்மாதம் ஆரம்பமாகின்றது.
Akasa Air எனப்படும் இந்த விமான சேவையின் 40 வீதமான பங்குகளை முதலீட்டாளர் Rakesh Jhunjhunwala என்பவர் வைத்திருக்கின்றார்.
அதேவேளை Get Airwaysஇன் முன்னாள் CEO Vinay Dube 15 வீதமான பங்குடன் Akasa Air இன் CEOஆக தொழிற்படுவார்
தன்னுடைய விமானசேவையை ஆரம்பிப்பதற்கான சான்றிதழையும் (Air Operator Certificate /AOC) அண்மையில் Akasa Air பெற்றுக் கொண்டது.
கடந்த வருடம் டுபாயில் நடைபெற்ற விமானக் கண்காட்சியில் 72 Boeing 737 MAX விமானங்களை ஆர்டர் செய்திருந்தது. அவற்றுள் 18 விமானங்கள் 2023 ஆம் ஆண்டு வரவுள்ளன. ஏனைய 54 விமானங்கள் 4 வருடத்திற்குள் வரவுள்ளன. கடந்த மாதமே தன்னுடைய முதலாவது விமானத்தைப் பெற்றது.
இம்மாதத்தில் இரண்டு விமானங்களுடன் சேவையை ஆரம்பிக்கின்றது. பின்னர் இந்த நிதியாண்டின் (Fiscal Year) இறுதியில் 18 விமானங்களாக உயர்வடையும். அடுத்த 5 வருடங்களில் அதாவது மார்ச் 2027 ஆம் ஆண்டளவில் இந்த விமான சேவையின விமானங்களின் எண்ணிக்கை 72 ஆக உயர்வடையும்.
இந்த விமான நிறுவனத்தினுடைய Code அண்மையில் Director General of Civil Aviation (DGCA) இடமிருந்து கிடைக்கப்பெற்றது. எனவே இது QP என்ற Code பெயரால் அழைக்கப்படும்.
பிளாஸ்டிக் போத்தல் கழிவுகளிலிருந் மீள்சுழற்சி செய்து உருவாக்கப்பட்ட ஒரு வகையை இதில் பணியாற்றும் பணியாளர்கள் அணிகின்றனர்.
இந்த விமான சேவை இந்தியாவின் நம்பகமான , கட்டணம் குறைந்த மற்றும் சூழலுக்குப் பாதிப்பு விளைவிக்காத விமான சேவையாக விளங்கும் என்று குறிப்பிடப்படுகிறது.
ஆங்கில இணையத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

