பாக்கிஸ்தானில் 21 அங்குலம் (54cm) நீளமான காதுகளைக் கொண்ட ஆட்டுக் குட்டியொன்று காணப்படுகின்ற விடயம் இணையத்தளங்களில் பிரபல்யமாகி வருகின்றது. பாக்கிஸ்தானின் கராச்சி விமான நிலையத்தில் விமான போக்குவரத்து பிரிவில் (Air Traffic Control Unit) கடமையாற்றி வருபவர் Mohammad Hasan Narejo என்பவராவார். இவரே இந்த ஆட்டின் உரிமையாளராவார். இந்த ஆட்டுக் குட்டி பற்றிய விடயங்கள் கின்னஸ் குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆட்டுக் குட்டியின் பெயர் Simba என்பதாகும்.




