01. அனுப்பிய குறுஞ் செய்திகளை திருத்த (Edit) முடியும். அப்படி திருத்தினால் குறுஞ்செய்திகளுக்குக் கீழே திருத்தப்பட்டது (Edited) என்று பதிவாகியிருக்கும்.
02. நாம் ஒருவருக்கு அனுப்பிய குறுஞ்செய்தியை மீளப் பெற்றுக் கொள்ள(unsend) முடியும்.
03. நமக்கு வரும் குறுஞ்செய்திகளை வாசிக்கப்படாதது என்று குறித்து(Mark) வைத்துக் கொள்ள முடியும்.
04. உங்களுடைய Lock Screen ஐ அழுத்திப் பிடித்து அதில் மாற்றங்கள் செய்து கொள்ள முடியும்.
05. நேரம் மற்றும் திகதிக்கான எழுத்து (Font) வடிவத்தினை மாற்றிக் கொள்ள முடியும்.
06. ஒன்றுக்கு மேற்பட்ட Lock Screenகளை வைத்து இருக்க முடியும். அவற்றை இலகுவாக மாற்றிக் கொள்ள முடியும்.
07. Notification கள் திரையை முழுமையாகப் பிடித்துக் கொள்ளாமல் திரையின் கீழ்ப்பகுதியில் காணப்படும்.
08. குறிப்பிட்ட ஒரு படத்திலிருந்து பிண்ணனியை (Background) நீக்கி தேவையான பகுதியை மாத்திரம் எடுத்து குறுஞ்செய்தி போன்றவற்றில் சேர்த்துக் கொள்ள முடியும்.இன்னும் பல புதிய விடயங்களும் காணப்படுகின்றன.
