அன்டார்டிக்காவின் பனிப் பாறைகளின் அடியில் உயிரினங்கள் வாழ்வது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இறால் போன்ற உயிரினமொன்றே இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பனிப்பாறைகளுக்கு அடியில் உள்ள நீரிலேயே இவை வாழ்கின்றன. நியுஸிலாந்தைச் சேர்ந்த விஞ்ஞானிகளின் குழுவொன்றே இந்தக் கண்டுபிடிப்பை மேற்கொண்டுள்ளது. பனிப்பாறையில் 500 மீற்றர் துளை ஏற்படுத்தி அதனூடாக கமெராவினை அனுப்பி இந்த விடயம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.