கண்களுக்கு பாதுகாப்பான புதிய TCL Note A1 NXTPAPER

TCL Note A1 NXTPAPER


உண்மையான தாளில் எழுதுவது போன்ற Tablet Computer ஒன்றை பயன்படுத்துவதற்கு நீங்கள் விரும்பி இருக்கின்றீர்களா? உங்களுக்கென்றே விரைவில் சந்தைக்கு வரவுள்ளது TCL நிறுவனத்தினுடைய TCL Note A1 NXTPAPER எனப்படுகின்ற புதிய Tablet Computer. 

இது விஷேடமாக மாணவர்கள், ஆசிரியர்கள், குறிப்பு எடுக்கக் கூடியவர்கள்  Bloggers மற்றும் ஏனைய வாசிப்பதிலும் எழுதுவதிலும் நீண்ட நேரத்தை செலவழிக்க கூடிய துறை. சார்ந்தவர்களுக்காக உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இது சாதாரணமான ஒரு கணினியைப்  போல் இயங்குவதோடு காகிதத்தில் எழுதுவது போன்ற அனுபவத்தையும் தருகின்றது.  

TCL Note A1 NXTPAPER இன் சிறப்பம்சங்கள்

  • இதனுடைய சில சிறப்பம்சங்களை பார்ப்போம் 11.5 அங்குலம் அளவிலான திரையையும் கொண்டிருக்கின்றது. சூரிய ஒளி, மின்விளக்கு போன்ற வெளிச்சம் திரையில் பட்டாலும் திரை தெளிவாக தெரிய உதவும் தொழில்நுட்பத்துடன் கூடிய திரை இதனுடைய திரையாகும் (Anti - Reflective Didplay). அத்துடன் 16.7 மில்லியன் நிறங்களை இதன் திரை காட்சிப்படுத்தக் கூடியது. அத்துடன் 20200 x 1440 அளவிலான resolution ஐயும் 120Hz Refresh Rateடையும் இது கொண்டிருக்கின்றது. 
  • அத்துடன் இதற்கென்றே வடிவமைக்கப்பட்ட T-Pen Pro எனப்படுகின்ற எழுது கருவி ஒன்றையும் இது கொண்டிருக்கின்றது.  
  • அத்துடன் ஒலிகளை பதிவு செய்வதற்கும்  ஒலி வடிவில் உள்ளவற்றை எழுத்து வடிவில் மாற்றுவதற்குமான 8 Micகள் இதில் காணப்படுகின்றன. . 
  • அத்துடன் ஆவணங்களை Scan செய்வதற்கு 13 Mega Pixel Camera வையும் கொண்டிருக்கின்றது.  
  • 8000 mAh Battery 256 GB கொள்ளளவையும் கொண்டிருக்கின்றது. 
  • அத்துடன் Google Drive , Microsot OneDrive போன்ற மேகக் கணினி சேவைகளையும் (Cloud Services) இதில் பெற்றுக் கொள்வதற்கான வசதி காணப்படுகின்றது. 
  • இது Android இல் இயங்கக் கூடியதாக இருந்தாலும் Play Store ஐப் பயன்படுத்த முடியுமா என்பது தெரியவில்லை.
  • இதனுடைய நிறை 500 கிராம் ஆகும்.
  • இக்கருவியானது PDF, Word, PPT, PPTX, Excel, HTML, RTF, TXT, EPUB, MOBI, AZW3, FB2, CHM, CBZ, மற்றும் CBR போன்ற கோப்புக்களை ஆதரிக்கின்றது.
  • உங்களுடைய மின்னூல்களை CloudSync, LAN, மற்றும் USB போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி இக்கருவிக்கு நீங்கள் மாற்றிக் கொள்ள முடியும். 
  • தட்டச்சு செய்வதற்கு இலகுவாக Keyboard ஐயும் இதனுடன் இணைத்துக் கொள்ள முடியும். 
  • 256 கொள்ளளவைக் கொண்ட TCL Note A1 NXTPAPER ஆனது 549 ஐக்கிய அமெரிக்க டொலர் விலையில் விற்கப்படும். 
  •  கண்களுக்குப் பாதுகாப்பில்லாத பாவணைக்கான இவ்வுற்பத்தியானது TUA சான்றிதழையும் பெற்றுள்ளது.
  • ஏனைய கணினிகளில் காணப்படுகின்ற Eye Strain பிரச்சனை இந்த வகையான டேப்லெட்டுகளில் காணப்படுவதில்லை .
  • பெப்ரவரி மாத இறுதிக்குள் ஐரோப்பா, வட அமெரிக்க, ஆசிய பசுபிக் நாடுகளில் சந்தைக்கு வரவிருக்கின்றது.

TCL Note A1 NXTPAPER இல் காணப்படும் AI வசதிகள்

நீங்கள் இதில் கையால் எழுதுகின்ற போது உங்களுடைய கையெழுத்து  நேர்த்தியானதாகவும் அழகானதாகவும் மாற்றுகின்றது. அதேபோல் உங்களுடைய கைகளால் எழுதுகின்ற எழுத்துக்களை Type செய்யப்பட்ட எழுத்துக்களாகவும்  மாற்றிக் கொள்ள முடியும். இவ்வாறு பெற்றுக் கொள்ளப்பட்ட எழுத்துக்களை நாம் சேமிப்பதற்கு, மாற்றங்கள் செய்வதற்கு, மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கும் முடியும். அதே நேரத்தில் கருத்தரங்குகள் கூட்டங்கள் அல்லது வகுப்புகளில் பேசுகின்ற விடயங்களை, ஒலிகளை பதிவு செய்து அவற்றை எழுத்து வடிவிற்கும் நாம் மாற்றிக் கொள்ள முடியும். தேவை ஏற்பட்டால் நாம் ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு  மொழிபெயர்ப்பு வேலைகளையும் கூட நாம் இதில் செய்து கொள்ளக் கூடிய வசதி இருக்கின்றது. அத்துடன் பெரிய ஒரு ஆவணத்தை நாம் சுருக்கமானதாகவும் மாற்றிக் கொள்ள முடியும் நீங்கள் எழுதுகின்ற எழுத்துக்களின் இலக்கணங்களை சரிபார்க்க முடிவதோடு மற்றும் தெளிவின்மையான வசனங்கள், மீள எழுதப்பட்டிருக்கின்ற வசனங்கள் போன்றவற்றை கூட திருத்தலாம். வலைப்பதிவு (Blog) மின்னஞ்சல் தயாரித்தல், கற்பதற்கான குறிப்புகளை எழுதுதல் போன்ற வேலைகளைச் செய்வதற்கு இந்த வசதியானது மிகவும் பிரயோசனமானதாக காணப்படுகின்றது.



கருத்துரையிடுக

புதியது பழையவை