அமெரிக்காவின் ஒஹியோ பிரதேசத்தைச் சேர்ந்தவர் Austin Bellamy . கடந்த செவ்வாய்க் கிழமை தனது நண்பருக்காக Lemon மரக் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார். அப்போது தவறுதலாக அங்கிருந்த தேனிக் கூட்டை வெட்டி விட்டார். இதனால் குழப்பமடைந்த தேனிக்கள் (African Killer Bees) அவரைக் கொட்ட ஆரம்பித்தன. ஆபிரிக்க இனத்தைச் சேர்ந்த இந்த தேனிக்களால் அவர் சுமார் 20000 முறை கொட்டப்பட்டார் என்று தெரிய வருகின்றது. தேனிக்களால் கொட்டப்பட்டு கோமா நிலைக்கு சென்று விட்டார் அவர். எனினும் அவர் கண்விழித்ததாக அறிய முடிகின்றது.
அவருடைய குடும்பமும் அவ்விடத்தில் இருந்தாலும் அவர்களும் தேனிக்களின் தாக்குதலுக்குள்ளாகியமையால் அவர்களாலும் இவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அத்துடன் அண்ணளவாக 30 தேனிக்கள் வாய் மூலம் அவருடைய வயிற்றினுள்ளும் சென்றுள்ளன. அவற்றை வெளியே எடுப்பதற்கு வைத்தியர்கள் ஒரு நாளை செலவிட்டுள்ளனர். கூடிய சீக்கிரம் Austin Bellamyமுழுமையாக குணமடைவார் என்று வைத்தியர்கள் நம்புகின்றனர்.
ஆங்கில இணையத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.