அமெரிக்காவின் 2 Droneகளை பிடித்தது ஈரான்.


 ஐக்கிய அமெரிக்காவின் ஆளில்லா 2 உளவு படகுகளை (Spy Vessels) ஈரானின் கடற்படை செங்கடல் பிரதேசத்தில் வைத்து பிடித்து விடுவித்துள்ளது.

குறித்த இரண்டு உளவு படகுகளையும் ஈரானுடைய  ஹெலிகாப்டர் அவதானித்ததை அடுத்து இரண்டு எச்சரிக்கைகள் விடுக்கப்பட்ட பின்னர் இந்த இரண்டு உளவு படகுளும் பிடிக்கப்பட்டுள்ளன. அண்மை காலத்தில் சில நாட்களாக சர்வதேச கடற்பரப்பில் ஆளில்லா உளவு படகுகளின்  நடமாட்டத்தையும் ஈரானின் கடற்படை அவதானிக்க கூடியதாக இருப்பதாக தெரிய வருகிறது இதுபோன்ற சம்பவங்கள் இனிமேல் நடக்கக்கூடாது என்று அமெரிக்க கடற்படைக்கு எச்சரிக்கை வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


ஆங்கில இணையத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.



கருத்துரையிடுக

புதியது பழையவை