ஆர்ஜன்டினாவின் துணை ஜனாதிபதி Fernández de Kirchner. இவர் தன்னுடைய வீட்டிற்கு வெளியில் ஆதரவாளர்களைச் சந்தித்துக் கொண்டு நின்றார். இந்த வேளையில் நபரொருவர் துணை ஜனாதிபதியின் முகத்தை நோக்கி கைத்துப்பாக்கியை நீட்டினார். அந்தக் கைத்துப்பாக்கியில் 5 தோட்டாக்கள் இருந்தன. எனினும் குறித்த நபர் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
குறித்த துணை ஜனாதிபதிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து அவருடைய ஆதரவாளர்கள் துணை ஜனாதிபதியின் வீட்டிற்கு முன் சில நாட்களாக திரண்டு வருகின்றனர். இந்த நிலையிலேயே மேற்குறித்த சம்பவம் நடைபெற்றது. இதில் 35 வயதான பிரேசில் நாட்டவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
ஆங்கில இணையத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.
Tags:
Argentina