மஞ்சள் சிவப்பு பச்சை நிற வாழைப்பழங்களை நாம் அறிந்திருக்கின்றோம். நீல நிற வாழைப்பழங்களை அறிந்திருக்கின்றோமா?
ஆம். நீல வாழைப் பழங்களும் காணப்படுகின்றன.
இந்த நீல வாழைப்பழங்கள் Blue Java Banana என்று அழைக்கப்படுகின்றன.
இந்த வாழைப்பழங்கள் Ice Cream போன்று மென்மையாகவும் Vanilla Custard போன்ற மணத்தையும் கொண்டிருக்கின்றன.
தென் கிழக்காசிய பிரதேசங்கள், மத்திய அமெரிக்க மற்றும் ஹவாய் போன்ற பிரதேசங்களில் இந்த வாழை மரங்கள் வளருகின்றன. 15 - 20 அடி வரை வளரக் கூடிய இவற்றின் பொருத்தமான வளர்ச்சிக்கு 40 செல்ஸியஸ் வெப்பம் தேவை.
இந்த வாழை மரங்களை அமேசன் இணையத்தளம் மூலம் Fast-Growing-Trees.com இணையத்தளம் மூலமும் பெற்றுக் கொள்ளலாம்.
குறிப்பு : ஆங்கில இணையத்தளங்களில் வந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.