குப்பை அள்ளிய Rolls Royce கார்.




இந்தியாவின் ராஜஸ்தானின் ஆழ்வார் பிரதேச மன்னர்களுள் ஒருவர் Jai Singh Prabhakar. இவர் ஒரு முறை லண்டன் சென்றார்.

அங்கு ரோல்ஸ் ரோய்ஸ் காட்சியறைக்கு சென்றிருந்தார். மன்னரை அடையாளங் கண்டு கொள்ளாத அங்கிருந்த ஒரு ஊழியர் மன்னரை நோக்கி இந்தக் காரை வாங்குவதற்கு நீங்கள் லாயக்கில்லை என்று கூறினார். 

பின் தன்னுடைய ஹோட்டல் அறைக்கு திரும்பிய மன்னர் தன்னுடைய பணியாளரை அழைத்து ரோல்ஸ் ரோய்ஸ் காட்சியறைக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டு மன்னர் சில கார்களை வாங்க வர இருப்பதாக சொல்லச் சொன்னார்.

அதன் பின்னர் காட்சியறையிலுள்ள விற்பனையாளர்களெல்லாம் ஒழுங்குபடுத்தப்ட்டார்கள். சிவப்பு நிற விரிப்பு ( Carpet ) விரிக்கப்பட்டு மன்னரை வரவேற்க தயாராகியது காட்சியறை. தன்னுடைய மன்னர் தோற்றத்தில் காட்சியறைக்கு வந்திறங்கினார் மன்னர். காட்சியறையில் அந்த வேளையில் 06 ரோல்ஸ் ரோய்ஸ் கார்கள் விற்பனைக்கு இருந்தன. அவற்றை முழுப் பெறுமதி கொடுத்து வாங்கிய மன்னர்  Deliveryக்குரிய பெறுமதியையும் கொடுத்தார். 

இந்தியாவுக்குத் திரும்பிய மன்னர் அந்த 06 கார்களையும் குப்பை அள்ளுவதற்கு பயன்படுத்தும் படி மாநகராட்சிக்கு ( Municipality) உத்தரவிட்டார்.


இந்த செய்தி வெளிநாடுகளில் பரவியது. இதை அறிந்த ரோல்ஸ் ரோய்ஸ் நிறுவனம் அதிர்ச்சியடைந்தது. ரோல்ஸ் ரோய்ஸின்புகழ் குறைந்தது. வருமானம் குறைந்தது. உடனடியாக அந்த நிறுவனம் மன்னரிடம் மன்னிப்புக் கேட்டு தந்தி அனுப்பியது. அத்துடன் 06 புதிய கார்களை மன்னருக்கு இலவசமாக அளித்தது. மன்னரும் ரோல்ஸ் ரோய்ஸை மன்னித்தார்.

கருத்துரையிடுக

புதியது பழையவை