ஒக்டோபர் 2021 உலக நிகழ்வுகள்


வட மாகாணத்தின் புதிய ஆளுநராக ஜீவன் தியாகராஜா நியமிக்கப்பட்டார். 

இலங்கை - பிரான்ஸ் பாராளுவமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவராக நாமல் ராஜபக்ஷ தெரிவானார். 

இலங்கை இராணுவத்தின் 72 ஆவது வருடப் பூர்த்தி கொண்டாடப்பட்டது. 

இந்திய இராணுவ தளபதி ஜெனரல் மனோஜ் முகுந்த் நரவானே இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டார். 

இலங்கையின் முதலாவது டெஸ்ட் அணியின் தலைவர் பந்துல வர்ணபுர  தனது 68ஆவது வயதில் காலமானார். 

கினியாவின் இடைக்கால ஜனாதிபதியாக கேணல் Mamady Doumbouya பதவியேற்றுக் கொண்டார். 1

எதியோப்பியாவின் பிரதமர் அபி அஹமட் தன்னுடைய இரண்டாவது பதவிக்காலத்திற்காக பதவியேற்றார். கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற பாராளுவமன்றத் தேர்தலில் அபி அஹமட்டின் Prosperity Party கட்சி வெற்றி பெற்றமை குறிப்பிடத்தக்கது. 

டியுனிசியாவின் முதற் பெண் பிரதமராக  Najla Bouden Ramadhane நியமிக்கப்பட்டார். டியுனிசியாவின் ஜனாதிபதியினால் இவர் இந்தப் பதவிக்கு பெயரிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

ஜப்பானின் கடற்படைக் கப்பல்களான Murasame, Kaga, Fuyuzuki ஆகியவை இலங்கைக்கு வருகை தந்தன. Murasame, Kaga ஆகியவை இலங்கைக் கடற்படையுடன் பயிற்சியில் ஈடுபட்டன.

ஜப்பானின் பிரதமராக புமியோ கிஷிடா பதவியேற்றார். இவர் ஜப்பானின் 100 ஆவது பிரதமராவார். ஜப்பானின் பிரதமர் யொஷிகிடே சுகா பதவி விலகியதை அடுத்து ஆளும் லிபரல் ஜனாதிபதிக் கட்சிக்குள் புதிய பிரதமரைத் தெரிவு செய்யும் போட்டியில் வெற்றி பெற்றே இவர் பிரதமராக பதவியேற்றார். 

கட்டாரின் சூறா சபைக்கு 30 உறுப்பினர்கள் தேர்தல் மூலம் தெரிவு செய்யப்பட்டனர். 15 பேர் மன்னரினால் நியமிக்கப்படவுள்ளனர். கட்டாரின் சூறா சபைக்கான முதலாவது தேர்தல் இதுவாகும். 

மைக்ரோசொப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் 11 இயங்குதளம் வெளியிடப்பட்டது.

தாய்வானின் வான் பரப்புக்குள் சீனாவின் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன.

ரஷ்யாவின் The Challenge திரைப்படத்திற்கான படப்பிடிப்புக்களை மேற்கொள்வதற்காக இயக்குனர் Klim Shipenko, நடிகை `Yulia Peresild விண்வெளி வீரர் Anton Shkaplerov ஆகியோர் 12 நாட்கள் விண்வெளியில் தங்கியிருந்து படப்பிடிப்பை முடித்துக் கொண்டு பூமி திரும்பினர். உலக வரலாற்றில் விண்வெளியில் படப்பிடிப்பு மேற்கொள்ளப்பட்ட திரைப்படம் இதுவாகும். 

இவ்வருடத்திற்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.

பௌதிகவியல் : கால நிலை சம்மந்தப்பட்ட கண்டுபிடிப்புகளுக்காக..

            யுகரோ மனபே( அமெரிக்கா),  க்ளாஸ் ஹேஸல்மன்(ஜெர்மனி) ஜார்ஜியோ பாரிசி(இத்தாலி)

இரசாயனவியல் : மூலக்கூறு கட்டமைப்பு தொடர்பான கண்டுபிடிப்புகளுக்காக 

        பெஞ்சமின் லிஸ்ட்  ஜெர்மனி

         டேவிட் டபிள்யூ.சி. மெக்மில்லன் அமெரிக்கா

இலக்கியம் : அப்துல் ரசாக் குர்னா ( தன்சானிய)

சமாதானம் :   அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்தியமைக்காக இரண்டு ஊடகவியலாளர்களுக்கு..

          திமித்ரி மொரொட்டா (Dmitry Muratov),  மரியா ரிசா (Maria Ressa) .

பொருளாதாரம் : தொழிலாளர்களின் பொருளாதாரம் தொடர்பான பங்களிப்பிற்காக    

 டேவிட் கார்ட்,  ஜோஸ்வா டி ஆங்க்ரிஸ்ட் , கெய்டோ W. இம்பென்ஸ் (அமெரிக்கா)

   

மலேரியாக் காய்ச்சலுக்காக உருவாக்கப்பட்ட தடுப்பு மருந்தான RTS,S/AS01 [Brand Name Mosquirix (மொஸ்கியுரிக்ஸ்)]எனும் மருந்திற்க உலக சுகாதார அமைப்பினால் முதன் முறையாக அங்கீகாரம் வழங்கப்பட்டது.

எயார் இந்தியா நிறுவனத்தை டாடா நிறுவனம் 18 ஆயிரம் கோடிக்கு வாங்கியது. 

ஈரானின் முதல் ஜனாதிபதி ஆபூல்ஹசன் பனிசதர் காலமானார். ஈரானில் 1979 ஆம் ஆண்டு இஸ்லாமிய புரட்சி ஏற்பட்ட பின் பதவியேற்ற முதலாவது ஜனாதிபதி இவராவார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா இணைந்து கொண்டது. (2022 ஆண்டு தவணைக்காக...). இந்த அமைப்பு இஸ்ரேலுக்கு எதிராக செயற்படுவதாகக் கூறி கடந்த 2018 இல் அமெரிக்கா இதிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது. 

அதிக கடன் சுமை கொண்ட 10 நாடுகளின் பட்டியல் உலக வங்கியினால் வெளியிடப்பட்டது. இந்தப் பட்டியலில் உள்ள நாடுகள் விபரம் : கானா, கென்யா, அங்கோலா, பங்களாதேஷ், எத்தியோப்பியா,  உஸ்பெஸ்கிஸ்தான், ஸாம்பியா மங்கோலியா, நைஜீரியா, பாகிஸ்தான்

அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்க செயலாளர் கொலின் பவல் காலமானார். 

இந்தியாவின் 29 ஆவது சர்வதேச விமான நிலையம் உத்தர பிரதேசத்தின் குஷி நகரில் திறந்து வைக்கப்பட்டது. இந்த நிலையத்திற்கான முதலாவது விமானம் இலங்கையில் இருந்து சென்றது. இதில் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்டவர்கள் பிரயாணம் செய்தனர். 

பார்படோஸ் நாடு தன்னுடைய ஜனாதிபதியாக சன்ட்ரா மேசன் என்பவரை பாராளுவமன்றம் ஊடாக தெரிவு செய்தது. இதன் மூலம் பிரித்தானிய மகாராணி இந்த நாட்டின் தலைமைப்பதவியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த நாடு கடந்த 1966 ஆம் ஆண்டு பிரித்தானியாவிடமிருந்து சுதந்திரம் பெற்றது. எனினும் அதன் தலைமைப் பதவியில் பிரித்தானிய மகாராணி இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. பார்படோஸ் கரீபியன் தீவு நாடாகும். 

உலகின் முதலாவது சாரதியில்லாத ரயில் சேவை ரஷ்யாவில் ஆரம்பிக்கப்பட்டது. 

நோர்வேயின் புதிய பிரதமராக Jonas Gahr Støre தெரிவு செய்யப்பட்டார். நோர்வேயின் பாராளுவமன்றத் தேர்தல் கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. 

Truth Social எனப்படும் சமூக வலைத்தளத்தை ஆரம்பிக்க இருப்பதாக அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினால் அறிவிக்கப்பட்டது. 

சூடானின் இராணுவம் அந்த நாட்டின் பதில் பிரதமரைக் கைது செய்ததோடு ஆட்சியையும் பிடித்தது.

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் Shavkat Mirziyoyev இரண்டாவது பதவிக் காலத்திற்காக தெரிவு செய்யப்பட்டார்.

உலகின் பணக்காரர் பட்டியலில் Tesla நிறுவனத்தின் இணை நிறுவுனர் Elon Musk முதலிடத்தைப் பிடித்தார். அவர் 300 பில்லியன் அமெரிக்க டொலருக்குச் சொந்தக்காரராவார். 

Facebook நிறுவனம் தன்னுடைய பெயரை Meta என மாற்றியது. இந்த நிறுவனத்தின் கீழ் Facebook, Messenger, Whatsapp, Instagram ஆகிய நிறுவனங்களும் ஏனைய சில நிறுவனங்களும் தொழிற்படவுள்ளன. 

தென்கொரியா தன்னுடைய சொந்த நாட்டில் தயாரித்த Nuri எனப்படும் ரொக்கட்டை சோதனை செய்து பார்த்தது.

சீனா Shijian 21 எனப்படும் செய்மதியை விண்ணுக்கு அனுப்பியது.

முந்தைய மாத செய்திகள்

உலக நிகழ்வுகள் செப்டம்பர் 2021

உலக நிகழ்வுகள் ஆகஸ்ட் 2021

உலக நிகழ்வுகள் ஜூலை 2021

உலக நிகழ்வுகள் ஜூன் 2021


கருத்துரையிடுக

புதியது பழையவை