உலக நிகழ்வுகள் நவம்பர் 2021

 

உலக நிகழ்வுகள் நவம்பர் 2021

இலங்கை நிகழ்வுகள்

மாலைதீவு ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் ஷாலிஹ் இலங்கைக்கு இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டார்.

கல்யாணி பொன் நுழைவாயில் (Golden Gate Kalyani) பாலம் களனியில் திறந்து வைக்கப்பட்டது. உயர் தொழில்நுட்ப முறையில் கம்பிகளினால் இப்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

ரஷ்யாவின் பாதுகாப்பு செயலாளர் நிக்கொலாய் பட்ருஷெவ் ஜனாதிபதியைச் சந்தித்தார்.

கொழும்பு குதிரைப் பந்தய திடலில் நடைபெற்ற பிரதமர் மஹிந்த ராஜபக்ச கிண்ண கால்பந்து இறுதிப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கியானி இன்பென்டினோ (Gianni Infantino) இலங்கைக்கு விஜயம் செய்தார். 

அநுராதபுரத்தில் 'சந்தஹிரு சே ரந்துன்' தாதுகோபம் ஜனாதிபதியினாலும் பிரதமரினாலும் திறந்து வைக்கப்பட்டது. 

கொழும்பு மும்தாஜ் மஹால் கட்டிடத்தில் அமையப்பெற்றுள்ள 'தேசிய பாதுகாப்பு கல்லூரி' ஜனாதிபதியினால் திறந்து வைக்கபட்டது.

உலக நிகழ்வுகள்

Yahoo நிறுவனம் சீனாவில் தன்னுடைய சேவைகளை நிறுத்தியது.

மகாத்மா காந்தியின் உருவம் பதித்த 5 யூரோ பெறுமதியான நாணயக் குற்றியொன்றை ஐக்கிய இராச்சியம் (UK) வெளியிட்டது.

சிலியின் பாராளுமன்றத்தின் கீழ் சபை அந்நாட்டு ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்வதற்காக வாக்களித்தது. 

தாய்வானைப் பிரதிநிதித்துவம் செய்யும் அலுவலகமொன்று லித்துவேனியாவின் தலைநகரில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Gaofen-11 03 என்ற பெயர் கொண்ட செய்மதியொன்றை சீனா விண்வெளிக்கு ஏவியது.

ஜப்பானின் ஆளும் தாராளவாத ஜனநாயகக் கட்சி தலைமையிலான கூட்டமைப்பு கடந்த மாதம் 31 ஆம் திகதி நடைபெற்ற நாடாளுவமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களைப் பெற்று ஆட்சியை அமைத்தது. 465 உறுப்பினர்களைக் கொண்ட ஜப்பானின் கீழ்சபைக்கான தேர்தலிலேயே இக்கூட்டமைப்பு 293 ஆசனங்களைப் பெற்று ஆசனங்களைப் பெற்றது.

ஒக்ஸ்போர்ட் ஆங்கில அகராதியின் 2021 இற்கான சொல்லாக Vax என்ற சொல் அறிவிக்கப்பட்டது. நோய்க்குள்ளான ஒருவரை தடுப்பூசி ஏற்றி நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் செயன்முறைக்கு இந்த சொல் பயன்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

விண்வெளியில் நடந்த முதல் சீன விண்வெளி வீராக்ங்கனை என்ற சாதனையை Wang Yaping பெற்றார். Shenzhou-13  மூலம் இவர் விண்வெளிக்கு பயணம் செய்திருந்த நிலையிலேயே இந்த சாதனையை இவர் நிறைவேற்றினார். 

கொரோனாவுக்கான உலகின் முதலாவது மாத்திரையான Molnupiravir இற்கு பிரித்தானியாவின் சுகாதாரத் துறை அங்கீகாரம் அளித்தது. 

செக் குடியரசின் பிரதமராக Petr Fiala நியமிக்கப்பட்டார். இந்த நாட்டின் சட்டத்துறைக்கான தேர்தல்  கடந்த ஒக்டோபர் மாதம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த Parag Agrawal  நியமிக்கப்பட்டார்.

கொரோனாவின் புதிய திரிபான Omicron தென்னாபிரிக்காவில் பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால் சில நாடுகள் தென்னாபிரிக்காவுடனான விமானப் போக்குவரத்தை நிறுத்தின. 



கருத்துரையிடுக

புதியது பழையவை