நாசா நிறுவனம் வெள்ளிக் கோளுக்கான இரண்டு விண்கலங்களை அனுப்பவுள்ளது. DAVINCI+ , VERITAS என்ற பெயரைக் கொண்ட விண்கலங்களே முறையே 2028 ஆம் ஆண்டிலும் 2030 ஆம் ஆண்டிலும் அனுப்பப்படவுள்ளன. இதற்காக 500மில்லியன் அமெரிக்க டொலர்களை நாசா ஒதுக்கியுள்ளது.
47 ஆவது G 7 அரச தலைவர்கள் மாநாடு ஐக்கிய இராச்சியத்தால் நடாத்தப்பட்டது. இவ்வருட தொனிப்பொருள் One Earth One Health ஆகும்.
இஸ்ரேல் காசா மீது வான்வெளித் தாக்குதல்களை நடாத்தியது. தெற்கு இஸ்ரேலில் தீப்பிடிக்கும் பலூன்களை பறக்க விடப்பட்டதற்கு பதிலடியாக இந்த தாக்குதல் நடாத்தப்பட்டதாக இஸ்ரேல் கூறியது. இஸ்ரேலில் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர் காசா மீது மேற்கொண்ட முதல் தாக்குதல் இதுவாகும்.