மதுபானம் தயாரிப்பதற்குப் பயன்படும் எதனோல் இறக்குமதி பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பணிப்புரைக்கமைய நிறுத்தப்பட்டது. நிதி , பொருளாதார அபிவிருத்தி, கொள்கைத் திட்டமிடல்அமைச்சர் என்ற வகையில் பிரதமரினால் இந்தத் தடை பிறப்பிக்கப்பட்டது.
தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி முற்றாக நீக்கப்பட்டது. அத்தோடு வருமான வரி உட்பட சிறிய மற்றும் நடுத்தர தொழில் துறைகளுக்கான வரிகளும் குறைக்கப்பட்டன. பிரதமரி மஹிந்த ராஜபக்சவின் வழிகாட்டல்களுடன் இந்த வரிச்சலுகைகள் ஜனவரி 1 இலிருந்து நடைமுறைக்கு வந்தன.
வருமான வரி 2 இலட்சத்து ஐம்பதாயிரம் மாத வருமானம் பெறும் அரச தனியார் ஊழியர்களிடம் இருந்து அறவிடப்படும். ஏற்கனவே இது ஒரு இலட்சமாக இருந்தது. ஆகக்குறைந்த வருமானமான 250000 ஐப் பெறும் ஊழியர்கள் 6% வரியையும் அதற்கு உயர்ந்த வருமானத்தைப் பெறுபவர்கள் 18% செலுத்த வேண்டும். இந்தத் தொகை ஆரம்பத்தில் 24% ஆகக் காணப்பட்டது.
நிலையான சேமிப்பு, சிறுவர் சேமிப்பு, சிரேஷ்ட பிரஜைகள் வைப்பு மீது விதிக்கப்படும் வரியானது தொகை 250000 ஐ தாண்டினால் மாத்திரம் விதிக்கப்படும்.
அனைத்துப் பொருட்கள் சேவைக்கான வற் வரியானது 15%இலிருந்து 8% ஆக்கப்பட்டது.
தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி இல்லாமலாக்கப்பட்டது.
மின்சாரத்தில் இயங்காத வாகனங்கள், முச்சக்கர வண்டிகள், மோட்டார் சைக்கள்களுக்கான காபன் வரி வித்pக்கப்படவுள்ளது.இதன்படி பயணிகள் பஸ்களுக்கான காபன் வரி 1000-3000 வரை விதிக்கப்படவுள்ளது.
மதஸ்தாபனங்கள், தகவல் தொழில்நுட்ப துறைகள் வருமான வரியிலிருந்து விலக்கப்படுகின்றன.
வருடாந்தம் 300 மில்லியனுக்கு அதிகமாகப் பெறும் வியாபார நடவடிக்கையில் ஈடுபடுவோரிடமிருந்து வற் வரி அறவிடப்படும்.
எட்டாவது பாராளுவமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் (03.01.2020) ஆரம்பித்தது. அவைத் தலைவராக தினேஷ் குணவர்தனவும் ஆளும் கட்சியின் பிரதம கொரடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னான்டோவும் தெரிவு செய்யப்பட்டனர். எதிர்க்கட்சித்தலைவராக சஜித் பிரேமதாஸ அறிவிக்கப்பட்டார்.
19 ஆவது திருத்தச்சட்டத்தை திருத்துதல் 15ஆவது திருத்தச்சட்டத்தை மாற்றுதல் தொடர்பாக விஜேதாஸராஜபக்சவால் கொண்டுவரப்பட்ட 21 மற்றும் 22 ஆம் திருத்தச்சட்ட பிரேரணைகள் அடங்கிய இரண்டு தனிநபர் பிரேரணைகள் பாராளுவமன்ற வர்த்தமானியில் வெளியிடப்பட்டன.
நாடு முழுவதும் 1000 பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் ஒவ்வொரு மாவட்டங்களிலும் மும்மொழிப்பாடசாலைகள் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ச அறிவித்தார்.
எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவின் அணியினர் பாராளுவமன்றத்தில் தனித்து இயங்க முடிவெடுத்தனர்.
கல்வித்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தும் வகையில் புதிய செயலணியொன்று கல்வியமைச்சர் டலஸ் அழகப் பெருமவால் ஏற்படுத்தப்பட்டுள்ளது.கலாநிதி எம். உபாலி சேதர இதன் தலைவராவார்.
2023 வரை இலங்கைக்கு GSP + வரிச் சலுகையை வழங்க ஐரோப்பிய ஒன்றியம் இணக்கம் தெரிவித்திருப்பதாக கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சு தெரிவித்தது.
--------------------------------
அணுகுண்டுச் சோதனைகளையும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைச் சோதனைகளையும் நடத்துவதிலுள்ள தடைகளை கைவிடுவதாக வடகொரியா அறிவித்தது.
காட்டுத்தீ காரணமாக அவுஸ்திரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் மாநிலத்தில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
பாக்தாதில் அமெரிக்கத் தூதரகத்தை முற்றுகையிட்டிருந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இவர்கள் ஈரான் குழுக்களால் பயிற்சி வழங்கப்பட்டவர்களாக குறிப்பிடப்படுகிறது. சிரியா மற்றும் ஈராக்கில் அமெரிக்கா நடத்திய வான் தாக்குதலில் 25 ஈரானுக்கு ஆதரவான போராளிகள் கொல்லப்பட்டதையடுத்தே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஹமாஸ் இயக்கத்தின் கட்டுப்பாட்டிலுள்ள காசாவில் பத்தாஹ் அமைப்பின் பேரணி இடம்பெற்றது. பத்தாஹ் அமைப்பின் 55 ஆண்டு நிறைவையொட்டி இந்த பேரணி நடத்தப்பட்டது. காசா உள்துறை அமைச்சு இந்தப் பேரணிக்கான அனுமதியை வழங்கியிருந்தது.
லிபியாவில் திரிபோலியில் இராணுவக் கல்லூரி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 28 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு லிபியாவிலுள்ள ஜெனரல் கலீபா ஹப்தருக்கு ஆதரவான கிளர்ச்சிப்படை இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக குறிப்பிடப்படுகிறது. லிபியாவுக்கு படையினரை அனுப்பும் நடவடிக்கை ஆரம்பித்திருப்பதாக துருக்கி பிரதமர் தையிப் அர்துகானால் தெரிவிக்கப்பட்டது. திரிபோலியை மையமாகக் கொண்ட ஐ.நா ஆதரவு கொண்ட அரசாங்கத்திற்கு வலுச் சேர்க்கும் விதமாக இந்தப் படை அனுப்பப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது. ஜெனரல் ஹப்தருக்கு எகிப்து , ஐக்கிய அரபு இராச்சியம் என்பத ஆதரவளிக்கின்றன. லிபிய அரசுக்கு துருக்கி, கட்டார் என்பன ஆதரவளிக்கின்றன. அத்தோடு யுத்த நிறுத்தம் சம்மந்தமாக ரஷ்யாவில் நடத்தப்பட்ட சந்திப்பைத் தொடர்ந்து ஒப்பந்தத்தில் கைச்சாத்திடாமல் ஹப்தர் ரஷ்யாவை விட்டு வெளியேறினார்.
லிபியாவின் ஐநா ஆதரவு பெற்ற அரசாங்கத்தின் தலைவரான பயஸ் அல் சர்ராஜ் கைச்சாத்திட்டிருந்த நிலையிலேயே இந்த வெளியேற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்த சந்திப்பின் தோல்வியைத் தொடர்ந்து மற்றுமொரு சந்திப்பு நடைபெற்றது.லிபியாவில் சண்டையிடுகின்ற தரப்புக்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவான வெளிநாட்டு சக்திகள் , ஐ.நா தரப்பு உள்ளிட்ட தரப்புகளின் பேச்சுவார்த்தை ஜேர்மனியில் நடைபெற்றது. இதில் ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டின், துருக்கி ஜனாதிபதி தையுப் அர்துகான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
கென்யா மற்றும் அமெரிக்கப்படை பயன்படுத்தும் கென்யாவிலுள்ள சிம்பா எனப்படும் கடற்படைத் தளத்தில் அல்ஷபாப் கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர்.
பூமியின் அளவைக் கொண்ட TOI 700 D என்ற கிரகமொன்றை நாசாவின் TESS கண்டுபிடித்தது. உயிரினங்கள் வாழ சாத்தியம் கொண்ட கோளாக இது கருதப்படுகிறது.
இங்கிலாந்து இளவரசர் ஹரி மற்றும் மேகன் ஆகியோர் அரசகுடும்பத்தின் மூத்த உறுப்பினர்கள் என்ற நிலையிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். பின்னர் மகாராணியும் இதற்கு ஒப்புதல் வழங்கினார். ஹரி மற்றும் கேட் ஆகியோர் இனி இளவரசர் இளவரசி என்ற அரச பட்டத்தைப் பெற மாட்டார்கள் என்றும் அறிவிக்கப்பட்டது.
சுமார் 50 ஆண்டு காலமாக ஓமானின் சுல்தானாக இருந்த கபூஸ் தன்னுடைய 79 வயதில் காலமானார். புதிய சுல்தானாக ஹைதம் பின் தாரிக் தெரிவு செய்யப்பட்டார்.
தாய்வானில் நடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயக முற்;போக்குக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி சாய் இங்வென் வெற்றி பெற்றார்.
பிலிப்பைன்ஸில் உள்ள தால் எரிமலை குழம்புகளை வெளியேற்றத் தொடங்கியதைத் தொடர்ந்து 14000 மக்கள் வெளியேற்றப்பட்டனர்.
காட்டுத்தீ காரணமாக ஒட்டகங்கள் கிராமங்களுக்குள் பிரவேசித்ததால் அவுஸ்திரேலிய அரசால் 5000 ஒட்டகங்கள் அழிக்கப்பட்டன.
ரஷ்ய பாராளுவமன்றத்திற்கு அதிகாரத்தை கொண்டு வருவது தொடர்பில் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து அரசாங்கம் பதவி விலகியது.
அமெரிக்க மற்றும் சீனாவுக்கிடையில் வர்த்தக ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அமெரிக்காவிலிருந்து 200 பில்லியனுக்கு அதிகமான இறக்குமதி செய்யவும் மதி நுட்ப சொத்து தொடர்பான விதிகளை வலுப்படுத்தவும் இந்த ஒப்பந்தம் வழி சமைத்துள்ளது. சீனாவுக்கு இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்படும் வரியை அரைவாசியாகக் குறைக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் சீன துணை பிரதமர் லீயு ஹீ ஆகியோருக்கிடையில் வெள்ளை மாளிகையில் வைத்து ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
உலகின் மிகக் குள்ள மனிதராக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்த நேபாளத்தைச் சேர்ந்த 27 வயதான காகேந்திர தபா மகார் மரணமடைந்தார்.
லெபனானின் ஹிஸ்புல்லாஹ் இயக்கத்தை ஹென்டுராஸ் அரசு பயங்கரவாத இயக்கமாக அறிவித்தது.