ஹொங்கொங்கிற்கான சீன பாதுகாப்புச் சட்டம் சீனாவில் நிறைவேற்றப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஹொங்கொங் ஜனநாயக ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்களை நசுக்குவதுடன் தொடர்புபட்ட சீன அதிகாரிகளுடன் தொடர்புபட்ட வங்கிகளுக்கு எதிராக தடை விதிக்கப்பட்டது. அத்துடன் அமெரிக்கா மீது தடைகளை விதிப்பதாக சீனா அறிவித்தது. ஸின்ஜியாங் - உய்குர் மக்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களுக்கு எதிராக தடைகளை விதித்திருந்த நிலையில் சீனா அமெரிக்க அதிகாரிகளை இலக்கு வைத்து இந்த தடையை கொண்டு வந்துள்ளது.
பிரான்ஸ் பிரதமர் எடோத் வாரட் பிலிப்பே தலைமையிலான அமைச்சரவை தமது பதவியை இராஜிநாமா செய்தது. இந்த இராஜிநாமாவை பிரான்ஸ் பிரதமர் இம்மானுவேல் மெக்ரோன் ஏற்றுக் கொண்டுள்ளார்.
ஒபெக் 16 எனப்படும் உளவு செய்மதியை இஸ்ரேல் விண்ணுக்கு ஏவியது.
போலந்து ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி அன்டர் சேஜ் டுடா வெற்றி பெற்றார். www.ulahavalam.com
வயது வந்த பகுத்தறிவுமிக்க பெண்ணொருவர் தனியாக சுதந்திரமாக வாழ்வது குற்றமாகாது என சவூதி நீதிமன்றமொன்று தீர்ப்பு வழங்கியது. பெண்கள் தமது குடும்பத்தினரின் அனுமதியின்றி தனித்து வாழ்வது குற்றமாகக் கருதப்பட்டது. தனித்து வாழும் பெண்ணொருவருக்கு எதிராக அவரது குடும்பத்தால் நீதிமன்றத்தில் தாக்கப்பட்ட வழக்கைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வெளியிட்டுள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியம் தனது முதலாவது விண்கலத்தை செவ்வாய்க்கு ஜப்பானிலிருந்து ஏவியது.
தென்கொரியா தனது முதலாவது இராணுவ செய்மதியை அமெரிக்காவிலிருந்து ஏவியது.
சீனா செவ்வாய்க்கான தனது முதலாவது விண்கலத்தை ஏவியது. தி யன் வென் -1 (சொர்க்கத்திற்கு கேள்விகள் ) என்பது அதன் பெயராகும்.
மலேசியா முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக்கிற்கு எதிராக தண்டணை விதிக்கப்பட்டது. அரசாங்க நிதியத்திலிருந்து பண மோசடிக் குற்றச் சாட்டில் 12 வருட சிறைத் தண்டணை மற்றும் 210 மில்லியன் ரிங்கிட் ( 49 மில்லியன் அமெரிக்க டொலர் ) தண்டம் விதிக்கப்பட்டது.
உலகில் முதன்முறையாக நிலத்தின் கீழிருந்து ஏவுகணையொன்றை ஈரான் பரிசோதித்தது. www.ulahavalam.com