3700 வருடங்கள் பழைமையான களிமண் தட்டு

 


கி.பி 1894 ஆம் ஆண்டு மத்திய ஈராக்கில் எனும் பிரதேசத்தில் களிமண்ணாலான தட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. Si.427 என்று அழைக்கப்படுகின்ற இது கி.மு 1900-1600 காலப்பகுதியில் உருவாக்கப்பட்டது. அதாவது 3700 வருடங்கள் பழைமையானது. 


பாபிலோனியர்களுக்கு சொந்தமான இதில் சில தகவல்கள் எழுத்தாணியால் எழுதப்பட்டுள்ளன. இரண்டாக பிரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்ட வயலொன்று பற்றிய சட்ட மற்றும் புவியியல் ரீதியான விடயங்கள் இதில் எழுதப்பட்டுள்ளன. அதன்படி நில அளவீடு சம்மந்தப்பட்ட அக்காலத்திற்குரிய ஆவணத்திற்கான ஒரு உதாரணமாக இதனைக் கொள்ளலாம். 


தற்காலத்தில் பயன்பாட்டில் உள்ள பைதகரஸ் தேற்றத்தை (Phythagoras triples) பைதகரஸிற்கு 1000 வருடங்களுக்கு முன்பே அக்கால் நில அளவையாளர் பயன்படுத்தியமை வியப்பூட்டுகின்றது.  மக்கள் தங்களுடைய நிலம் என்று சிந்திக்கத் தொடங்கிய காலத்தில் இது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது தங்களுக்குரிய நிலம் அதற்குரிய எல்லைகள் என்று மக்கள் எண்ணத் தொடங்கிய போது இது பயன்படுத்தப்பட்டுள்ளது.  


இரண்டு காணிகளுக்கும் இடையிலான பேரிச்சம் மரங்கள் தொடர்பாக எழுந்த தகராறுதான் இது. இந்தத் தகராறைத் தீர்க்க உள்ளுர் தலைவர் நில அளவையாளரை அனுப்பியுள்ளார். இந்த எல்லைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள விதம் அக்கால கேத்திர கணித அறிவை பறை சாற்றுகின்றது. 

இந்தக் களிமண் தட்டு அமைக்கப்பட்ட காலத்தில் கிடைத்த ஏனைய களிமண் தட்டுக்களிலும் காணி எல்லைகள் பற்றிய விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 

Sin - Bel - Apli என்பவருக்கும் செல்வந்த காணி சொந்தக் கார பெண்மணிக்குமிடையிலான தகராறு பற்றி மற்றுமொரு களிமண் தட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.  


Tags : Iraq, Babylonian, Si.427





கருத்துரையிடுக

புதியது பழையவை