உற்றுப் பார்ப்பதற்கும் தொழில்நுட்பம்


Camero- -Tech எனும் நிறுவனம் சுவர்களுக்கூடாக அவதானிப்பதற்கான கருவியைக் கண்டுபிடித்துள்ளது. XAVER 1000 என அழைக்கப்படுகின்ற இது ரேடர் தொழில்நுட்பம் மூலம் இயங்குகின்ற ஒரு கருவியாகும். இதன் மூலம் சுவர்களுக்கு அந்தப் பக்கம் இருப்பதை பார்க்க முடியும் என அறிய முடிகின்றது.

யுத்தங்களில் ஈடுபடுகின்ற போது மூடிய சுவர்களுக்குள் எதிரிகளின் நடமாட்டத்தை அறிவதற்கு இது உதவும்.  

தேடுதல் மற்றும் மீட்பு படை, இராணுவப் படை, புலனாய்வுப் பிரிவு  போன்றவற்றுக்கு இந்த உபகரணங்கள் வழங்கப்படவுள்ளன. 

இது செயற்கை நுண்ணறிவு முறை மூலம் இயங்கக் கூடியது.

சுவருக்கு அப்பாலுள்ள நிலையான மற்றும் அசையும் உருவங்களை அடையாளம் காணக் கூடியது.

சுவருக்கு அந்தப் பக்கம் இருப்பது வளர்ந்தவரா குழந்தையா அல்லது மிருகமான என்பதை அடையாளம் காண முடியும். உருவங்களின் உயரத்தையும் அறிந்து கொள்ள முடியும்.

சுவரின் மீது வைத்து அல்லது தாங்கி (Stand) மூலம் நிறுத்தி இதனை இயக்க முடியும்.


சுவருக்கு அந்தப் பக்கம் உள்ள அறையின் வடிவமைப்பு, அறையிலுள்ள விடயங்கள் போன்றவற்றையும் அறிந்து கொள்ள முடியும்.





ஆங்கில இணையத் தளங்களில் வந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 

http://www.ulahavalam.com/2022/06/ios16.html


கருத்துரையிடுக

புதியது பழையவை