உலகில் அதிக செலவுமிக்க நகரங்கள்

2022 ஆம் ஆண்டுக்கான உலகில் அதிக செலவுமிக்க நகரங்களின் பட்டியலை  Economist Intelligence Unit (EIU) அமைப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தப் பட்டியலில் அமெரிக்காவின் நியுயோர்க் நகரம் முதலிடத்தில் உள்ளது. இரண்டாவது இடத்தில் சிங்கப்பூர் உள்ளது. கடந்த வருடம் முதலிடத்தில் காணப்பட்ட இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் இம்முறை மூன்றாம் இடத்தில் உள்ளது. 

உக்ரேன் மீதான ரஷ்யாவின் யுத்தம், ரஷ்யா மீதான மேற்கு நாடுகளின் தடைகள் சீனாவின் கொவிட்டைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் வட்டி வீதங்கள், பரிமாற்ற வீதங்களுடன் இணைந்த வழங்கல் சங்கிலி பிரச்சனைகளைத் (Supply Chain Problems) தோற்றுவித்துள்ளமை வாழ்க்கைச் செலவுப் பிரச்சனைகளைத் தோற்றுவித்துள்ளன என்று  Economist Intelligence Unit (EIU)அமைப்பின் தலைவர் Upasana Dutt தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

புதியது பழையவை