ஸம்ஸம் பௌண்டேசன் நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இனங்களுக்கிடையிலான ஒற்றுமை நிகழ்வு பாதுக்க மீபேயில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுந் நூர் ஜும்ஆப் பள்ளியில் நடைபெற்றது.
இந்து, பௌத்த, கிறிஸ்தவ மதகுருமார்கள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் பிரசன்னத்துடன் இடம் பெற்ற இந்நிகழ்வில் மௌலவி அஷ்ஷெய்க் அம்ஹர் ஹகம்தீன் அவர்களால் சிங்கள மொழியிலான ஜீம்ஆப் பிரசங்கமும் நடைபெற்றது. ஜூம்ஆத் தொழுகையின் பின்னர் நிகழ்வில் கலந்து கொண்ட மதகுருமார்களின் கருத்துப் பகிர்வும் இடம் பெற்றது.
Tags:
இலங்கை