கத்தார் தேசிய தினம் ஏன் கொண்டாடப்படுகிறது?


கத்தாரின் தேசிய தினம் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 18 அன்று கொண்டாடப்படுகின்றது. கடந்த 2007 இல் கத்தாரின் அப்போதைய முடிக்குரிய இளவரசர் ஷெய்க் தமீம் பின் ஹமத் அல் தானி அவர்களால் கத்தார் தேசிய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்தக் கத்தார் தேசிய தினம் ஏன் கொண்டாடப்படுகின்றது எனப் பார்ப்போம்.

1878 டிசம்பர் 18 அன்று கட்டாரின் ஆட்சியாளராக ஷெய்க் முஹம்மத் பின் தானி பதவியேற்றார். அக்கால கட்டத்தில் கத்தாரில் காணப்பட்ட பல இனக் குழுக்களை(Local Tribes) ஒன்றிணைத்து இவர் நவீன கத்தாரை உருவாக்கினார். இவர்  நவீன கத்தாரை உருவாக்கியதை  ஞாபகப்படுத்தும் விதமாக கத்தார் தேசிய தினம் கொண்டாடப்படுகிறது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை