இணையத்தளங்களுக்கு விஜயம் செய்வதற்காக நாம் வலைமேலோடிகளைப் (Browsers) பயன்படுத்தி வருகின்றோம். அவற்றுள் கூகுள் நிறுவனத்தின் Chrome பிரபல்யமானது. இந்த வலைமேலோடியில் பல தேவைகளுக்காக பல்வேறு Extensionsகளை நாம் நிறுவி பயன்படுத்துவது வழமை.
ஆனால் இவ்வாறு நிறுவப்படும் Extensionsகளைப் பற்றி நாம் அவதானமாக இருக்க வேண்டும். அண்மையில் இவ்வாறான ஐந்து Extensionsகளை Google நிறுவனம் தனது Chrome Web Store நீக்கியிருக்கின்றது. பாவனையாளர்களினால் பார்க்கப்படும் இணையத்தளங்கள் தொடர்பான தகவல்களை தேக்கி வைத்திருப்பதோடு பாவனையாளர்களில் இடங்களையும் இந்த Extensionsகள் அறிந்து வைத்தருக்கின்றன. பின்னர் இவர்கள் பார்க்கும் இணையத்தளங்களில் Javascript விளம்பரங்களைக் காட்சிப்படுத்துகின்றன. அதன் மூலமாக அவை வருமானம் ஈட்டிக் கொள்கின்றன.
Netflix Party, Netflix Party 2, FlipShope – Price Tracker Extension, Full Page Screenshot Capture – Screenshotting, AutoBuy Flash Sales ஆகியனவே கூகிளால் அப்ஸ்டோரிலிருந்து நீக்கப்பட்ட கள்.
இவை உங்கள் Chromeஇல் காணப்பட்டால் நீங்களும் அவற்றை நீக்கி விடுங்கள்.
ஆங்கில இணையத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.