Earendel என்பது புவியிலிருந்து 25 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவிலுள்ள ஒரு நட்சத்திரமாகும். இதனை James Webb தொலைநோக்கி படம் பிடித்து அனுப்பியிருக்கின்றது.
ஏற்கனவே இந்த நட்சத்திரம் நாசாவின் Hubble தொலைநோக்கியால் படம் பிடிக்கப்பட்டு கடந்த ஜூலை 30 இல் James Webb தொலைநோக்கியினால் படம் பிடிக்கப்பட்டுள்ளது.
Morning Star or Rising light எனப் பொருள்படும் வகையில் அழைக்கப்படுகின்ற இந்த நட்சத்திரம் Sunrise Arc எனப்படும் Galaxy இல் அமைந்துள்ளது. பூமிக்கு அருகில் உள்ள WHL0137-08 எனப்படும் Galaxy Clusterரின் ஈர்ப்பின் காரணமாக இந்த நட்சத்திரத்தின் ஒளி நீண்ட வளைவாகக் காணப்படுவதால் இந்தப் பெயரில் இது அழைக்கப்படுகிறது.
பெரு வெடிப்பின் (Big Bang) பின்னரான 900 மில்லியன் வருடங்களுக்குப் பின்னரான இந்த நட்சத்திரத்தின் காட்சியைத்தான் நாம் இப்போது பார்க்கிறோம் . ஏனென்றால் ஒளி பிரயாணம் செய்வதற்கு குறிப்பிட்ட காலம் எடுக்கும்.
Earndel நட்சத்திரம் மற்றும் Sunrise Arc என்பன எதனால் ஆக்கப்பட்டுள்ளன என்பது தொடர்பான ஜேம்ஸ் வெப்பின் அவதானிப்பு எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆங்கில இணையத் தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.