Khaby Lame பற்றிய புதிய தகவல்

 


டிக்டொக்கில் அதிக செல்வாக்குடையவர் கெபி லேம். இவருடைய காணொளிகளை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.  அண்மையில் இவர் பற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இத்தாலிய ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்த பதில்களிலேயே அவர் பற்றிய புதிய தகவல்களை வெளியிட்டுள்ளார். தான் ஒரு முஸ்லிம் என்பதுவே அந்த செய்தி.

2000ஆம் ஆண்டு மார்ச் 09 அன்று செனகலில் பிறந்தார். அவருக்கு ஒரு வயதாகின்ற போது அவருடைய குடும்பம் இத்தாலிக்கு இடம் பெயர்ந்து சென்றது. அவருடைய 14 வயதில்  அவர் குர்ஆன் மத்ரசா ஒன்றில் இணைந்து கொண்டார். அத்துடன் முழுக் குர்ஆனையும் மனனம் செய்து கொண்டார். 


கொரோனா காரணமாக தன்னுடைய தொழிலை 2020 இல் இழந்த கெபி லேம் டிக் டொக்கில் இணைந்த கொண்டார். 2022 ஜூன் 22 புள்ளிவிபரங்களின் படி அவரை டிக்டொக்கில் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கை 142.1 மில்லியன்களாகும். 



கருத்துரையிடுக

புதியது பழையவை