தொலைபேசி பாவனையாளர்கள், தொழில் நுட்ப ஆர்வலர்கள் நீண்ட காலமாக காத்திருந்த Asus Rog Phone 6 இப்போது இந்தியாவில் அறிமுகமாகியுள்ளது.
Asus Rog Phone 6 உடன் சேர்த்து Asus Rog Phone 6 Pro உம் கிடைக்கிறது. இதனுடைய அம்சங்கள் Gamerகளுக்கு வசதியாக அமைந்துள்ளன. அன்ரொயிட்டுக்கு ஏற்ற வேகமான சிபியுவையும் கொண்டிருக்கின்றது.
அத்துடன் இன்னும் பல சிறப்பம்சங்களை தன்னகத்தே கொண்டிருக்கின்றது. 12 GB RAM ஐக் கொள்ளக் கூடிய Snapdragon 8+ Gen 1 CPU வைக் கொண்டிருக்கின்றது. அதுவே Rog Phone 6 Proவில் 18 GB வரை RAM காணப்படுகின்றன.
இதற்கு முன்னர் வந்த இவ்வகை தொலைபேசிகளை விட இதில் குளிர்மைப்படுத்தும் தொகுதி (Cooling System) சிறப்பாக காணப்படுகிறது,
இதனுடைய முதன்மைக் கமராவிற்கு 50MP Sony IMX766 உணரி (sensor) காணப்படுகிறது. 12 MP அளவுள்ள முன்பக்க கமராவினையும் (Front Camera) கொண்டிருக்கின்றன.
165Hz refresh rate கூடிய 6.7-inch அளவுள்ளFHD+ AMOLED திரையையும் கொண்டிருக்கின்றன. 720Hz touch sampling rate ஐயும் கொண்டிருக்கின்றன. HDR10+ நிறங்களுக்கு இயைபுடையதாக அமைகின்றது. Brightness ஐப்பொறுத்த வரை1200 nits உடையதாகக் காணப்படுகிறது, .
Gorilla Glass Victus எனும் கண்ணாடியையும் கொண்டிருக்கின்றன. தொலைபேசியின் பின்புறத்தில் சிறிய pOLED displayயும் காணப்படுகிறது. 30W அளவுள்ள Chargerf ஐயும்கொண்டிருக்கின்றன.
18GB RAM, 512GB storage அளவுள்ள ROG Phone 6 Pro தொலைபேசியின் இந்திய விலை 89999 ரூபாய்களாகும்.
Phantom Black ,Storm White ஆகிய நிறங்களில் ROG Phone 6 கிடைக்கிறது.
Solar White நிறத்தில் ROG Phone 6 Pro கிடைக்கிறது.
இன்னும் பல அம்சங்களுடன் இது கிடைக்கின்றது. முடியுமானவர்கள் வாங்கி பயன்படுத்திப் பார்த்து உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.







