உலகின் மிகப் பெரிய குளிர்மைப்படுத்தும் முறைமை


உலகின் மிகப் பெரிய குளிர்மைப்படுத்தும் முறைமை (Cooling System) சவூதியின் மஸ்ஜித் அல் ஹரமில் நிறுவப்பட்டுள்ளது. இந்த வகை முறைமையில் இதுவே உலகின் மிகப் பெரியது என கூறப்படுகின்றது. இந்த முறைமையின் கொள்ளளவு 159,000 ( RT )தொன்னாகும். 


இந்த குளிர்மைப்படுத்தும் முறைமையில் இரண்டு நிலையங்கள்(Stations) காணப்படுகின்றன. ஒன்று அஜ்யத் நிலையம் (Ajyat Station) மற்றையது புதிய மத்திய நிலையம் (New Central Station) என்பதாகும். புதிய மத்திய நிலையம் ஷாமியா நிலையம் (Shamiya Station) என அழைக்கப்படுகிறது. 
Shamiya Station


இதில் அஜ்யத் நிலையம் 35300 RT (Refrigeration Tonnes) கொள்ளளவைக் கொண்டது. இதில் 24500 RT(Refrigeration Tonnes) மாத்திரம் பயன்படுத்தப்படுகிறது. அதேவேளை ஷாமியா நிலையம் 120000 RT (Refrigeration Tonnes) கொள்ளளவைக் கொண்டது.

இந்தப் பள்ளிவாயலுக்கு வரும் பக்தர்களுக்கு குளிர்மையான மற்றும் கிருமித் தொற்றுக்களற்ற சூழலை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

மூன்று படிமுறைகளின் பின்னரே காற்றானது உள்ளே விடப்படுகிறது. முதலில் காற்றானது விசிறிகளைப் பயன்படுத்தி வடிகட்டிக்கு அனுப்பப்படுகிறது, பின்னர் தூசு துணிக்கைகள் வடிகட்டப்படுகின்றன. அதன்பின் சுத்தமான காற்று பள்ளியினுள் வெளியிடப்படுகிறது. காற்றானது இந்தப் பள்ளிவாயலுக்குள் அனுப்பப்படுவதற்கு முன் 09 முறை சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படுகிறது.

Ultraviolet Light Air Purification Technology எனப்படும் தொழில்நுட்பத்தில் இந்த முறைமை இயங்குகின்றது. 
 



Al Salem Johnson Controls (YORK) எனப்படுகின்ற நிறுவனமே இந்த குளிர்மைப்படுத்தும் முறைமையை நிறுவி நிர்வகிக்கின்றது.  இந்த நிறுவனமேMakkah Clock Royal Tower (with a cooling capacity of 46,000TR)இற்கும் , Jabal Omar இற்கும் குளிர்மைப்படுத்தும் வசதியை வழங்குகின்றது.
இந்தக் குளிர்மைப்படுத்தும் முறைமை கடந்த 2021 ஆம் ஆண்டு மஸ்ஜித் அல் ஹரமில் நிறுவப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  



கருத்துரையிடுக

புதியது பழையவை