தீவுகளுக்குப் பெயர் போன மாலைதீவில் மிதக்கும் நகரம் ஒன்று உருவாக்கப்பட்டு வருகின்றது. Brain Coral எனப்படும் மூளைபோன்ற வடிவில் காணப்படும் பவளத்தின் வடிவில் இந்த நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது.
மாலைதீவின் தலைநகர் மாலேயிலிருந்து 10 நிமிட பயணத் தூரத்தில் இந்த நகரம் அமைந்துள்ளது. பாடசாலைகள், கடைகள், உணவகங்கள் வீடுகள் என 20000 கட்டடங்களைக் கொண்டதாக இது அமைக்கப்பட்டு வருகின்றது.
இந்த நகரத்தின் முதல் பகுதி இம்மாதம் ஆரம்பிக்கப்படுகின்றது. வீடுகளில் 2024 ஆம் ஆண்டிலிருந்து மக்கள் குடியேற்றப்படுவார்கள் குடியேறுவார்கள் என்று கூறப்படுகிறது. முழு நகரமும் 2027 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்படும்.
மாலைதீவின் 80 சதவீதமான நிலப்பகுதி கடல் மட்டத்திலிருந்து வெறும் 1 மீற்றர் உயரத்திலேயே காணப்படுகின்றன. இதனால் மாலைதீவு கடல் மட்ட உயர்வு பிரச்சனையை அடிக்கடி எதிர்நோக்கி வருகின்றது. இந்தப் பிரச்சனைக்கான தீர்வின் ஒரு கட்டமாக இந்த மிதக்கும் நகரம் உருவாக்கப்படுகிறது.





