உலகளாவிய மொழியான ஆங்கில மொழியைப் படிப்பதற்கு பல்வேறு இணையத்தளங்கள் காணப்படுகின்றன. அவற்றுள் முக்கியமான ஒரு இணையத்தளம் ஒன்றைத்தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகின்றோம்.
அங்கே புதிய நண்பர்களைப் பெற்றுக் கொள்ள முடியும். அவர்களுடன் நட்பில் இருக்க முடியும். செய்திகளைப் (Messages) பரிமாறிக் கொள்ள முடியும்.
இதில் நீங்கள் ஆங்கிலத்தில் பதிவுகளை (Posts) இடலாம். அவற்றில் பிழைகள் இருந்தால் நண்பர்கள் சுட்டிக் காட்டுவார்கள.
பல்வேறு தலைப்புகளில் குழுக்கள் (Groups) காணப்படுகின்றன. அவற்றில் நீங்கள் விரும்பிய குழுக்களில் இணைந்து கொள்ளலாம்.
புகைப்படங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். காணொளிகளைப் பதிவேற்றலாம். அரட்டையடிக்கலாம். (Chat)
இப்படி பல்வேறு விடயங்களைக் கொண்டதாக இந்த இணையத்தளம் காணப்படுகின்றது.

அத்துடன் இந்த இணையத் தளத்தின் பிரதான இணையத்தளம் www.englishclub.com என்பதாகும்.
இதில் ஆங்கிலம் கற்போருக்கான இணைப்புக்கள் காணப்படுகின்றன. அதில் போய் பல விடயங்களை கற்றுக் கொள்ள முடியும்.
அத்துடன் ஆங்கிலம் கற்றுக் கொடுப்போருக்கான இணைப்புக்களும் காணப்படுகின்றன. அதில் போய் தேவையான விடயங்களை அறிந்து கொள்ள முடியும். அதே போல் மின் புத்தகங்களுக்கான இணைப்புக்களும் காணப்படுகின்றன. அவற்றையும் நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.
இவ்வாறாக பயனுள்ள விடயங்களைத் தாங்கியதாக இந்த இரண்டு இணையத் தளங்களும் காணப்படுகின்றன.
இன்றே இந்த இணையத்தளங்களுக்குச் சென்று உறுப்புரிமையைப் பெற்றுக் கொள்ளுங்கள்.

