ஐந்து கண்களையுடைய உயிரினம்


புராதன காலத்தில் உலகத்தில் வாழ்ந்த பல்வேறு உயிரினங்களைப் பற்றிக் கேள்விப் பட்டிருக்கின்றோம். அப்படி வாழ்ந்து அழிந்து போன உயிரினங்களில் ஒன்றுதான் ஒபபீனியா (Opabinia) எனப்படுகின்ற உயிரினம். 

இதன் தலையில் ஐந்து கண்கள் காணப்பட்டன. சுமார் 7 சென்ரி மீற்றர் வரை இந்த உயிரினம் வளரக் கூடியது. இதனுடைய உடம்பானது வரிவரியாகப் பிரிக்கப்பட்ட வடிவத்தைக் கொண்டது. இதனுடைய உடம்பின் இரண்டு பக்கமும் சிறகுகள் போன்ற அமைப்பு காணப்படுகிறது.


இதன் தலையின் கீழே பின்பக்கம் பார்த்த வகையில் வாய் காணப்படுகிறது.  இது கடலின் அடிப்பகுதியில் வாழக் கூடியது. 508மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த இந்த உயிரினம் பற்றிய விடயங்கள் கனடாவில் கண்டுபிடிக்கப்பட்டன. 



 இதனுடைய 3D வடிவத்தினை நீங்கள் கீழேயுள்ள இணைப்பினூடாக சென்று பார்க்கலாம். 

https://artsandculture.google.com/asset/opabinia-a-500m-year-old-creature-with-five-eyes/jwEx938NwO9A5w?hl=en


ஆங்கில இணையத் தளங்களில் வந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை