முயல்களிடம் மாட்டிய மாவீரன் நெப்போலியன்

 


பிரான்ஸ் பேரரசுக்கும் ரஷ்யாவுக்குமிடையில் நடைபெற்று வந்த யுத்தத்தை நிறுத்தும் வகையில் மேற்கொள்ளப்பட்ட டில்சித் (Treaty of Tilsit) ஒப்பந்தத்தின் வெற்றியைக் கொண்டாடும் முகமாக நெப்போலியன் விருந்தொன்றை ஏற்பாடு செய்திருந்தார். அந்த விருந்தில் இராணுவத்திலிருந்த முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர். அந்த விருந்து விழாவுக்கு பொறுப்பாக இருந்தவர் Berthier.  அவர் முயல்களைக் கூண்டிலடைத்துக் கொண்டு வந்திருந்தார். அவற்றை திறந்து விட்டு அவை பயத்துடன் ஓடும் போது அவற்றை வேட்டையாடுவதுதான் அவருடைய திட்டம். 

அவரின் திட்டப்படி குறிப்பிட்ட நேரத்தில் அந்த முயல்கள் கூட்டிலிருந்து திறந்து விடப்பட்டன. கூட்டிலிருந்து வெளியே வந்த முயல்கள் நெப்போலியனை நோக்கி வந்து அவரைச் சுழ்ந்து கொண்டன.  


ஆரம்பத்தில் இதனைப் பார்த்து அங்கிருந்தவர்கள் பின்னர்தான் ஆபத்தை அவர்கள் அறிந்து கொண்டனர். 

நெப்போலியனின் கால்களில் ஏறிய முயல்கள் அவருடைய மேலாடையில் ஏறத் தொடங்கின. நெப்போலியன் தன்னுடைய குதிரையை விரட்டும் குச்சியினால் அவற்றை தாக்குவதற்கு முயற்சி செய்தார். நெப்போலியனுடைய ஆட்கள் தடிகள் மூலம் அவற்றை விரட்ட முயற்சித்தனர். குதிரை வண்டிக்காரர்கள் சவுக்கினால் விரட்ட முயற்சித்தனர். 

ஆனால் இந்த செயற்பாடுகளினால் அவற்றை விரட்ட முடியவில்லை. எனவே பின்வாங்கிய நெப்போலியன் தன்னுடைய வண்டிக்கு தப்பிச் சென்றார். இருந்தும் முயல்கள் நெப்போலியனின் வண்டியையும் சூழ்ந்து கொண்டன. சில முயல்கள் வண்டிக்குள்ளும் சென்றதாக கூறப்படுகின்றது. 

எனவே அந்த வண்டி விரைவாக அங்கிருந்து சென்ற பின்னரே நெப்போலியன் அந்த முயல்களிடமிருந்து தப்பித்தார். 





ஆங்கில இணையத்தளங்களில் வந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது




கருத்துரையிடுக

புதியது பழையவை