நாளுக்கு நாள் புதுவிதமான ஆயுதங்கள் உலகிற்கு அறிமுகமாகிக் கொண்டே வருகின்றன. புதிய ஆயுதங்களைக் கண்டுபிடிப்பதில் நாடுகளுக்கிடையே போட்டியும் அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில் வேகமான ஏவுகணையைக் கண்டுபிடிப்பதிலும் நாடுகளுக்கிடையில் போட்டி காணப்படுகிறது. கடந்த வாரம் அமெரிக்க இராணுவத்தின் Defense Advanced Research Projects Agency (DARPA) எனும் பிரிவானது புதிய அறிவிப்பொன்றை வெளியிட்டது. ஒலியை விட வேகமாகச் செல்லும் ஏவுகணையை (Hypersonic Missile) தாம் பரீட்சித்திருப்பதாக அது அறிவித்தது.
Lockheed Martin எனப்படும் நிறுவனத்தால் இந்த ஏவுகணை தயாரிக்கப்பட்டது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக அறிய முடிகின்றது. ரஷ்யா மற்றும் சீனா ஆகிய நாடுகளிடம் வேகமான ஏவுகணைகள் இருப்பதாக செய்திகள் வெளிவருகின்ற நிலையில் அமெரிக்கா இந்த சோதனையை மேற்கொண்டுள்ளது.
இவ்வகையான ஆயுதங்கள் வளிமண்டலத்தின் மேற்பகுதியில் ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும். அதாவது மணித்தியாலத்திற்கு 62000 கிலோமீற்றர் வேகத்தில் செல்லக் கூடியது. இவ்வகையான ஆயுதங்கள் போர் விமானங்களின் இறகுகளின் கீழ்ப்பகுதியில் பொருத்தி இலக்கை நோக்கி ஏவப்படும்.
இந்த ஆய்வுக்காக 45 மில்லியன் அமெரிக்க டொலர்களை DARPA பெற்றிருந்தது.
ஆங்கில இணையத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.