உலகின் முதலாவது விஞ்ஞானி ஒரு முஸ்லிமா?

 




அதிகமான கண்டுபிடிப்புக்களை கண்டுபிடித்தவர்கள் முஸ்லிம்கள் என்று யாவரும் அறிவோம். அந்த அடிப்படையில் உலகில் முதலாவது விஞ்ஞானியா
 அநேகமானோரால் கருதப்படுபவர் இப்னுஹைதம் (Ibnu Haitham) என்பவராவார். நாம் தற்காலத்தில் 
நாம் பயன்படுத்தும் Digital Cameraவின் அடிப்படைக் கருவியைக் கண்டுபிடித்தவரும் இவராவார்.

இப்னு அல் ஹைதம் கி.பி 965 ஆம் ஆண்டு பிறந்தார். மேற்குலத்தவர்களால் Al Hazen என்று அழைக்கப்படும் இவர் தற்காலத்தில் நாம் அறியும் விஞ்ஞானக் கோட்பாடுகளான Devising a hypothesisமற்றும்  Physical experiments அல்லது கணிதவியல் சான்றுகள் என்பன பற்றி அவர் எழுதியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த அணுகுமுறைகள் 12 அல்லது 13 ஆம் நூற்றாண்டுகளில் ஆரம்பித்த மறுமலர்ச்சிக் காலத்தில் ஐரோப்பிய விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்பட்டதாக அண்மைக்காலம் வரை ஐரோப்பா நம்பிக்கொண்டிருந்தது. ஆனால் இந்த அணுகுமுறைகளை ழOptics,mineralogy மற்றும் மருத்துவம் போன்ற துறைகளில் முஸ்லிம் விஞ்ஞானிகளான அல் ஹைதம், அல் பிரூனி (Al Biruni) , இப்னு ஸீனா ( Ibnu Sina) ஆகியோர் 11 ஆம் நூற்றாண்டிலேயே பயன்படுத்தியமை பற்றி அறிந்து கொள்ள முடிகிறது.

பாத்திமிய அரசின் கலீபா அல் ஹக்கீம் பி அம்ருல்லாஹ்வின் கீழ்  பல வருடங்கள் எகிப்தில் பணியாற்றினார். இவருடைய கண்டுபிடிப்புகளில் முக்கியமானதுPin Hole Camera வாகும். பெட்டி ஒன்றினுள் ஒரு பக்கத்தில் துளையொன்றை இட்டு அதனுடாக வெளிச்சம் பாயச் செய்யப்பட்டு பெட்டியின் மறுபக்கத்தில் விம்பத்தைப் பெற்றுக் கொள்ள முடியும். கண் இயங்கும் முறையை அடிப்படையாகக் கொண்டு இந்த கண்டுபிடிப்பு கண்டு பிடிக்கப்பட்டது. Camera Obsecuraஎன்றும் இது அழைக்கப்படுகிறது.

 Camera Obsecura இவருடைய காலத்திற்கு முன் காணப்பட்டாலும்  இந்த முறையை பூரணமாக புரிந்து கொண்டு ஆராய்ச்சி செய்து பயன்படுத்தியவர் இப்னு ஹைதமேயாவார். இந்த எண்ணக் கருவின் பூரணமான விளக்கத்தினையும் Refraction of Light இன் அடிப்படையினையும் இப்னு ஹைதமின் கிதாப் அல் மனாஸிரில் நாம் கண்டு கொள்ளலாம். இவரின் இந்த நூல்  ஆங்கிலத்தில் The Obtics என அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பே நவீன கால Cameraவின் கண்டுபிடிப்புக்கு வழிகோலியது.

 வானியல், மருத்துவம், கணிதம், தத்துவவியல் என்று இப்னு ஹைதம் 200 இற்கு மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். ஆனால் அவருடைய முக்கியமான அடைவுகளாக நாம்  Obtics மற்றும் Physics ஐ க் கருதலாம். பௌதீகவியல் சம்மந்தப்பட்ட அவரது ஆய்வுகள் காரணமாக மத்திய கால ஐரோப்பாவில் The Physicistஎன்று அழைக்கப்பட்டார்.









கருத்துரையிடுக

புதியது பழையவை