பள்ளத்தில் பாய்ந்த பஸ்; பத்தொன்பது பேர் பலி; பாக்கிஸ்தானில் சம்பவம்.


இன்று பாக்கிஸ்தானில் அதிக வேகத்துடன் பயணித்த பயணிகள் பஸ்ஸொன்று பள்ளத்தாக்கில் பாய்ந்ததில் 19 பேர் பலியாகினர். மேலும் 12 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளுர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இஸ்லாமாபாத்திலிருந்து பலுகிஸ்தான் நோக்கி பயணித்த இந்த பஸ்ஸில் அண்ணளவாக 30 பிரயாணிகள் பயணித்தனர். விபத்து நடந்த பிரதேசத்தில் மழை பெய்தமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

புதியது பழையவை