9.96 செக்கன்களில் 100 மீற்றர்கள். இலங்கையரின் சாதனை


சுவிட்ஸர்லாந்தில் La Chaux-de-Fonds எனும் நகரில் நடைபெற்று வரும் Resisprint International competition எனும் போட்டியில் இலங்கையின் யுபுன் அபயகோன் (Yupun Abeyakoon) சாதனையொன்றை படைத்துள்ளார். 

ஆண்களுக்கான 100 மீற்றர் போட்டியில் 9.96 செக்கன்களில் இலக்கை அடைந்து போட்டியில் முதலிடம் பிடித்துள்ளார். இதன் மூலம் 100 மீற்றரை 10 செக்கன்களில் கடந்த முதல் ஆசியர் என்ற பெருமையும் இவருக்குக் கிடைத்துள்ளது. 

இந்தப் போட்டியில் இலக்கை 9.99 செக்கன்களில் அடைந்து கியுபா வீரர் இரண்டாம் இடத்தையும் 10 செக்கன்களில் இலக்கை அடைந்து பிரான்ஸ் வீரர் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.   


ஆங்கில இணையத் தளங்களில் வந்த விடயங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

கருத்துரையிடுக

புதியது பழையவை