பிலிப்பைன்ஸில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்


பிலிப்பைன்ஸில் புதன் கிழமை உள்ளுர் நேரப்படி காலை 8.43 மணியளவில்  சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 7.0 ரிச்டர் அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் சுமார் 30 நிமிடங்கள்  நீடித்தது. பிலிப்பைன்ஸின் Luzon தீவிலேயே இந்த நலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தை 400M தொலைவிலிருந்த பிலிப்பைன்ஸின் தலைநகர் மணிலாவில் இருந்தவர்களும் உணரக் கூடியதாக இருந்தது. இதனையடுத்து  தொழிலாளர்கள் மற்றும் பிரதேசவாசிகள் கட்டடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். 




இந்த சம்பவத்தில் 4 பேர் கொல்லப்பட்டதாகவும் 25 பேர் காயமடைந்ததாகவும் பிந்திக கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பிலிப்பைன்ஸானது Fire of Rings எனப்படும் எரிமலைகள் உள்ள பிரதேசத்தில் அமைந்திருப்பதோடு அடிக்கடி இயற்கை அனர்த்தங்களை எதிர்நோக்குகின்ற ஒரு  நாடாகும்.

ஆங்கில இணையத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

கருத்துரையிடுக

புதியது பழையவை