புராதன காலத்தில் உலகில் வாழ்ந்த டைனோசர்கள் பற்றிய விடயங்கள் எம்மை ஆச்சரியப்படுத்திக் கொண்டே வருகின்றன. இந்த டைனோசர்கள் பற்றிய ஆராய்ச்சிகளும் உலகளாவிய ரீதியில் பரந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதைப் பற்றிய புதிய புதிய கண்டுபிடிப்புகளும் தற்காலத்தில் அறியக் கிடைக்கின்றன.
அந்த வகையில் அண்மையில் சீனாவில் 100 மில்லியன் வருடங்கள் பழமையான டைனோசர்களின் காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் அமைந்திருக்கின்ற உணவகம் ஒன்றின் வெளிப்பகுதியில் இந்த காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. கட்டடங்கள் சூழப்பட்ட பிரதேசத்தில் இவ்வாறு டைனோசர்களின் காலடித்தடங்கள் கண்டுபிடிக்கப்பட்டது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது.
இந்த உணவகம் கட்டப்படுவதற்கு முன்னர் இங்கே கோழி பண்ணை இருந்ததாகவும் டைனோசரின் காலடித்தடங்கள் தூசி மற்றும் மண்களினால் மூடப்பட்டிருந்ததாகவும் அறிய முடிகின்றது. இந்த மண் அல்லது தூசி துணிக்கைகள் கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தான் நீக்கப்பட்டன அதாவது இந்த உணவகம் திறந்து திறக்கப்பட்ட போது தான் இந்த தூசுகள் மண்கள் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தை உரிமையாளர் தற்பொழுது வேலி அமைப்பு பாதுகாத்திருக்கின்றார்.
இந்தக் காலடித் தடங்கள் Sauropods எனப்படும் டைனோசர்களுக்கு சொந்தமானவை என்று அறிய முடிகின்றது. 3D Scannerகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளே இந்த முடிவை கண்டுபிடித்துள்ளன. இந்த வகையான டைனோசர்கள் நீண்ட கழுத்துக்கள் காணப்படும்.அதேபோன்று பூமியில் வாழ்ந்த மிகப் பெரும் உயிரினங்களாக இவை காணப்படுகின்றன. மூன்று பேருந்துகளின் நீளத்தை ஒத்த நீளத்தில் இவை வளரக்கூடியன.அதேபோல் இவை நடக்கின்ற போதும் பூமி அதிரக் கூடிய தன்மையை கொண்டது என்று கூறப்படுகின்றது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த காலடித்தடத்தை உடைய டைனோசர்கள் அண்ணளவாக எட்டு மீட்டர்கள் அதாவது 26 அடி நீளமான உடம்பை கொண்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.
இந்த டைனோசர்கள் Cretaceous எனும் யுகத்தைச் சேர்ந்தவையாகும்.சீனாவில் டைனோசர்கள் பற்றிய தொல்பொருள் ஆதாரங்கள் அதிகமாக கண்டுபிடிக்கப்பட்டாலும் இந்த யுகத்திற்குரிய டைனோசர்களின் ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறைவாகவே காணப்படுகின்றது.
எனவே இவ்வாறான கண்டுபிடிப்புகள் டைனோசர்கள் பற்றிய ஆச்சரியத்தை தொடர்ந்து டைனோசர்கள் பற்றிய பிரமிப்பை எமக்கு தொடர்ந்து ஏற்படுத்திக் கொண்டே இருக்கின்றன. மற்றுமொரு பதிவில் சந்திப்போம்.
ஆங்கில இணையத்தளங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.