விஞ்ஞானம் என்பது ஆச்சரியங்கள் பலவற்றைக் கொண்டது. கருந்துளை பற்றி அடிக்கடி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கருந்துளை பற்றி புதிய விடயம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இயங்கு நிலையற்ற கருந்துளையொன்று (Dormant Black Hole) அண்மையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கருந்துளையின் பெயர் VFTS 243 என்பதாகும். எமது சூரிய மண்டலம் அமைந்துள்ள பால்வீதிக்கு அப்பால் இந்த கருந்துளை காணப்படுகின்றது. இது ஒரு விஷேட வகையான கருந்துளையாகும்.
இரண்டு நட்சத்திரங்கள் ஒன்றையொன்று சுற்றி வருகின்ற விடயம் காணப்படுகின்றது. இந்த நிலைமையில் ஒரு நட்சத்திரம் இறந்து கருந்துளையாக மாறுகின்றது. இருப்பினும் மற்ற உயிருள்ள நட்சத்திரத்தின் ஈர்ப்பு காரணமாக அந்த கருந்துளை உயிருள்ள நட்சத்திரத்தை சுற்றி வருகின்றது.
இறந்த கருந்துளையும் மற்றைய உயிருள்ள நட்சத்திரமும் ஒன்றையொன்று சுற்றி வரும் விளக்கப்படக் காணொளியை கீழே நீங்கள் காணலாம்.
இப்படியாக ஒன்றையொன்று சுற்றி வருகின்ற இரட்டை நட்சத்திரங்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. ஆனால் அவற்றிற்கிடையேயுள்ள தூரமானது 10000 ஒளி ஆண்டுகள் வரை காணப்படுகின்றது.
எக்ஸ் கதிர்களை (X Rays) வெளியிடாத கருந்துளைகள் Dormant Back Holes என அழைக்கப்படுகிறது.