விண்வெளியில் ஹோட்டலா?


The Gateway Foundation எனும் நிறுவனம் விண்வெளியில் ஹோட்டலொன்றை எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு திறக்கவிருப்பதாக அறிவித்துள்ளது. 

இராட்டினம் (Ferries Wheel) போன்ற அமைப்பில் இருக்கும் இதனை பல்வேறு பிரிவுகள் / Modules இணைந்த  அமைப்பில் காணப்படும் ஒரு விண்கலம் என்று சொல்லலாம். இது 400 பேரைக் கொள்ளக் கூடிய அளவுடன் அமைக்கப்படுகிறது. 


இதிலுள்ள அலுவலக இடம், ஆய்வு கூட வசதிகள் என்பன வாடகைக்கு விடப்படவுள்ளன. 


தண்ணீர் கொண்ட Bucket ஐ நாம் சுழற்றுகின்ற போது அந்தப் Bucket சுழலும். ஆனால் அதனுள் உள்ள தண்ணீர் சுழலாமல் வெளிப்புறம் நோக்கி அழுத்தத்தைப் பிரயோகிக்கும். இதே தொழில்நுட்பத்திலேயே இந்த ஹோட்டல் நிர்மாணிக்கப்படுகிறது. 







கருத்துரையிடுக

புதியது பழையவை