சேர்பியாவிலிருந்து பங்களாதேசிற்கு பயணம் செய்த Antonov An-12 விமானம் விபத்திற்குள்ளானதில் 08 பணியாளர்கள் மரணமடைந்துள்ளனர். உக்ரேனுக்கு சொந்தமான கார்கோ விமானமான இது கிரேக்கத்தின் வட பிரதேசத்தில் விபத்திற்குள்ளாகியது. தீப்பிழம்புடன் பறந்து வந்த இந்த விமானமானது சோளம் பயிரிடப்பட்டிருந்த இடத்தில் வீழ்ந்ததாக சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவித்துள்ளனர். இயந்திரக் கோளாறு காரணமாக இந்த விமானத்தை தரையிறக்க விமானிகள் அனுமதி கேட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 11.5 தொன் எடையுள்ள இராணுவப் பொருட்களை இந்த விமானம் கொண்டு சென்றிருந்தது.
இந்த சம்பவம் சனியன்று நள்ளிரவை அண்மித்த வேளையில் நடைபெற்றது.
Tags:
Flight Crash