குடியேற்றவாசிகள் 60 பேரை ஏற்றிக் கொண்டு ஹெய்ட்டியிலிருந்து மியாமிக்கு பயணித்த படகு விபத்திற்குள்ளாகியதில் 17 பேர் மரணமடைந்தனர். இந்த சம்பவத்தில் 15 பெண்களும் குழந்தையொன்றும் மரணமடைந்ததாக அறிய முடிகின்றது.
இதுவரை 25 பேர் மீட்கப்பட்டுள்ளதோடு இன்னும் பலர் காணாமல் போயுள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்தும் நடைபெறுகின்றன. சட்ட விரோத குடியேற்ற வாசிகளை ஏற்றிக் கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படுகின்ற படகு ஒன்றே பஹாமாவிலிருந்து ஏழு மைல் தொலைவில் அதிகாலை 01 மணியளவில் விபத்துக்குள்ளானதாக பஹாமா பிரதமர் பிலிப் டேவிஸ் தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் தமது சொந்தங்களை இழந்த குடும்பங்களுக்கு அநுதாபங்களையும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயத்துடன் சம்மந்தப்பட்ட பஹாமாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெய்ட்டி குடியேற்றவாசிகளோடு தொடர்புபட்ட விபத்துக்கள் அதிகமாக இடம் பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.