ஐஸ்கிறீம் விற்கும் ரோபோ

 


ரஷ்யாவில் St. Petersburg International Economic Forum (SPIEF)நடக்கிறது. இதில் வித்தியாசமான ரோபோ ஒன்று காட்சிப்படுத்தப்பட்டது. ஐஸ் கிறீம் விற்கும் ரோபோதான் அது. வரவேற்பறையில் இருந்து கொண்டு வாடிக்கையாளரிடம் பேசி ஐஸ் கிறீம் விற்கும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதனையும் தாண்டி இந்த ரோபோ பல்வேறு வேலைகளைச் செய்யும் என்று கூறப்படுகிறது. 

இந்த ரோபாவால் குடிபானங்களை வாடிக்கையாளர்களுக்கு ஊற்றிக் கொடுக்க முடியும். வாடிக்கையாளர்கள் காத்திருக்கும் போது அவர்களுக்காக இசையை இசைக்கிறது. முன்னால் இருப்பவர் ஆணா அல்லது பெண்ணா என்று அடையாளம் காணும் இந்த ரோபோ சிறுவர்களிடம் அன்பாகவும் ஆண்களிடம் அவர்களுக்கேற்ற முறையிலும் பெண்களிடம் நல்ல நண்பி போலவும் பேச முடியும்.

Mrs. Perm – 2014 வெற்றியாளரான Diana Gabdullina வின் வடிவத்தில் அமைக்கப்பட்டிருக்கின்ற இந்த ரோபோவானது Dunyasha என்று அழைக்கப்படுகிறது. 













கருத்துரையிடுக

புதியது பழையவை