Lightyear நெதர்லாந்தைச் சேர்ந்த நிறுவனம் . இது முழுமையாக சூரிய சக்தியில் இயங்கக் கூடிய கார் ஒன்றினை இந்த வருடத்திற்குள் தயாரிக்க இருப்பதாக அறிவித்துள்ளது. இந்தக் காரின் கூரை,Hood மற்றும் Trunk போன்றவற்றில் சூரியப் படலைகள் (Solar panels) பொருத்தப்படவுள்ளன. நவம்பர் மாத இறுதியில் ஐரோப்பாவில் இக்கார் சந்தைக்கு விடப்படவுள்ளது.
ஒரு தடவை இக்கார் Charge ஆகினால் 388 மைல்கள் தூரம் வரை பிரயாணம் செய்யலாம்.
சூரிய ஒளியைப் பெறுகின்ற ஒவ்வொரு மணித்தியாலமும் 6 மைல்களுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்ளலாம்.
ஸ்பெய்ன், போர்த்துக்கல் போன்ற சூடான நாடுகளில் நாளொன்றுக்கு 22 மைல் பிரயாணத்தில் ஈடுபடும் ஒருவர் சுமார் 7 மாதங்களுக்கு தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்ள முடியும். அதே போல் நெதர்லாந்து போன்ற குளிர் நாடுகளில் 2 வாரங்களுக்குத் தேவையான சக்தியைப் பெற்றுக் கொள்ள முடியும்.
Lightyear One என்பது இந்தக் காரின் பெயராகும்.