அவுஸ்திரேலியாவுக்கு ஆபத்தாக மாறிய முயல்கள்



தோமஸ் ஒஸ்ரின் இங்கிலாந்துக் காரர். பண்ணையாளர். கி.பி 1859 இல் 24 காட்டு முயல்களை அவுஸ்திரேலியாவுக்குக் கொண்டு வந்தார். அவைகளை அவர் கொண்டு வந்ததன் நோக்கமே அவற்றை காட்டில் விட்டு பொழுது போக்கிற்காக வேட்டையாட வேண்டும் என்பதே. அதன் படி அவை ஒஸ்ரினின் பண்ணையில் விடப்பட்டன.

 எனினும் அவை வேகமாக பெருக ஆரம்பித்தன. பெருகியதோடு மட்டுமல்லாது தங்களுடைய வேலையைக் காட்டின. உணவு மற்றும் தண்ணீருக்காக இவை பண்ணைகளை அழித்தன. இந்த முயல்களின் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேலியடைத்தல், கண்ணி வைத்தல், சுடுதல் போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. 


எனவே இவற்றை எப்படியாவது இவற்றைக் குறைக்க வேண்டுமென்று முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. 

1866 ஆம் ஆண்டு சுமார் 14000 முயல்கள் சுடப்பட்டன. அவற்றை பண்ணையில் விட்டு 7 வருடங்களில் இங்கிலாந்து மகாராணியின் இரண்டாவது மகன் இளவரசர் அல்ப்ரட் ஒஸ்ரினின் பண்ணைக்கு வந்து முயல்களை வேட்டையாடியிருக்கிறார். வெறும் மூன்றரை மணித்தியாலங்களில் 416 முயல்களை வேட்டையாடியிருக்கின்றார். 

1900 காலப்பகுதியில் ஒஸ்ரினின் பண்ணையிலிருந்து 3000 மைல்கள் தூரத்திற்கு இவற்றின் பரவல் காணப்பட்டது. 

எனினும் 1920 ஆம் ஆண்டளவில் இவற்றின் எண்ணிக்கை 10 பில்லியனைத் தாண்டியது. 1940 காலத்தில் இவற்றின் எண்ணிக்கை 800 மில்லியனைத் தொட்டன. 




1.5 மில்லியன் சதுர மைல் பரப்பளவில் இவை நிலங்களை நாசப்படுத்தின என்று கணக்கிடப்பட்டுள்ளது. 

இவைகளைக் கட்டுப்படுத்துவதற்காக 2023 மைல்கள் நீளமான வேலியும் அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்டது. 



1890 மற்றும் 1920 பொருளாதார நெருக்கடி கால கட்டத்தில் இவை டின்களில் அடைக்கப்பட்டு உணவுக்காக ஏற்றுமதி செய்யப்பட்டன. 

இந்த முயல்களை விச வாயு செலுத்தி கொல்லும் முயற்சியும் மேற்கொள்ளப்பட்டது. 

அதன்படி myxomatosis எனும் வாயு கசிய விடப்பட்டது. ஆரம்பத்தில் முயல்களின் எண்ணிக்கை குறைந்தாலும்  முயல்களின் நோயெதிர்ப்பு சக்தி வளர்ந்து அவைகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்தது.1900 காலப்பகுதியில் calicivirus எனும் வைரசும் வெளியிடப்பட்டது. இதனால் காட்டு முயல்களின் எண்ணிக்கை குறைந்தாலும் ஏனைய முயல்களும் பாதிக்கப்பட்டன. 

ஒஸ்ரின் காட்டு முயல்களை அவுஸ்திரேலியாவுக்கு அறிமுகப்படுத்துவதற்கு முன்பே அங்கு வீட்டு முயல்கள் காணப்பட்டன. எனினும் அவை அதிகளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தவில்லை. 

விளையாட்டாக ஒஸ்ரின் செய்த காரியம் ஒரு நாட்டையே நாசப்படுத்தியது




கருத்துரையிடுக

புதியது பழையவை