பனிப்போர் காலத்தில் அணுகுண்டுப் பயம் காரணமாக பல நாடுகள் அணு குண்டுக்கு தாக்குதலிலிருந்து பாதுகாப்பாக இருக்கும் பொருட்டு பதுங்கு குழிகள் அமைத்தன. அவ்வாறான சில பதுங்கு குழிகள் பற்றிய தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளன.
1. Sonnenberg bunker
சுவிட்ஸர்லாந்தில் இது காணப்படுகிறது. ஒரே சமயத்தில் 20000 பேர் மறைந்து இருக்க முடியும்.1970-1976 காலப்பகுதியில் இது கட்டப்பட்டது.சுவிட்ஸர்லாந்தில் காணப்படுகின்ற மக்கள் அனைவரும் பாதுகாப்பாக தங்கியிருக்கும் வகையில் அங்கு இவ்வாறான பதுங்கு குழிகள் காணப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்தாகும்.
2. Bunker-42
இது ரஷ்யாவில் அமைந்துள்ளது. நிலத்தினடியில் 65 மீற்றர் ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. 1951 ஆம் ஆண்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 1956 ஆம் ஆண்டளவில் நிறைவு பெற்றன. அணுத்தாக்குதல் ஏற்பட்டால் 600 பேர் 30 நாட்களுக்கு தங்கியிருக்கும் வகையில் இது அமைக்கப்பட்டுள்ளது.
3. Bunk’Art
இது அல்பேனியாவில் காணப்படுகிறது. 20ம் நூற்றாண்டிலே அல்பேனியாவின் தலைவர் Enver Hoxha இனால் அதிகமான பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டன. 1983 ஆம் ஆண்டளவில் 173000 பதுங்கு குழிகள் அமைக்கப்பட்டன. மேலேயுள்ள படத்தில் காணப்படுவது Enver Hoxha இற்காக அமைக்கப்பட்ட பதுங்கு குழியின் படமொன்றாகும். இது 05 மாடிகளைக் கொண்டதாகவும் நூற்றுக்கு மேற்பட்ட அறைகளைக் கொண்டதாகவும் காணப்பட்டது. அண்மைக் காலத்தில் இது நூதனசாலையாக மாற்றப்பட்டது.