ப்ளேன்ச் மொனியர் (Blanche Monnier)
ப்ளேன்ச் மொனியர். ஒரு பேரழகி. பிரான்ஸில் பிறந்தவள். பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவள். அவளுடைய அழகின் காரணமாக அதிகமானோர் அவளை திருமணம் செய்ய விரும்பினர். ஒரு நாள் அவள் காணாமல் போய் விட்டாள். யாராலும் அவறை சந்திக்க முடியவில்லை.
25 வருடங்கள் கழித்து பிரான்ஸின் சட்டமா அதிபருக்கு (Attorney General) கடிதமொன்று வருகின்றது. பிரபலமான குடும்பமொன்று வீட்டுக்குள் ஏதோ ஒன்றை மறைத்திருப்பதாக அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.ஒருவர் 25 வருடங்களாக அழுக்குகளுடன் மிக மோசமான நிலையில் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
பின்னர் அவர்களுடைய வீடு பொலிஸாரினால் சோதனையிடப்பட்ட போது அவள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறை கண்டுபிடிக்கப்பட்டது. அந்த அறையின் பூட்டு 25 வருடங்களாக திறக்கப்படாமல் துருப்பிடித்து காணப்பட்டது. எனவே பூட்டை உடைத்து கதவை உடைத்து உள் நுழைத்தனர்.
அறை இருண்டு காணப்பட்டது. எனவே ஜன்னலை உடைத்து வெளிச்சத்தை வர வைத்தனர். அறையினுள் உடல் மெலிந்த நிலையில் அழுக்கடைந்த படுக்கையில் ஆடைகள் அற்ற நிலையில் சங்கிலியால் கட்டப்பட்டு இருந்த மொனியரைக் கண்டனர். அவளுடைய படுக்கையில் பூச்சிகள் ஓடிக் கொண்டிருந்தன. எழும்பி நிற்பதற்குக் கூட இயலாத நிலையில் அவள் காணப்பட்டாள்.
உள்நுழைந்த பொலிஸ்காரர்கள் சிறிது நிமிடங்களும் நிற்க முடியாத படி துர்வாடை வீசிக் கொண்டிருந்தது அந்த அறை. உடனடியாக அவள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டாள். வெளியே கொண்டு செல்லப்படும் போது புதிய காற்றைச் சுவாசித்த அவள் மிகவும் சந்தோசப்பட்டதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவித்தனர்.
அழகிக்கு வந்த ஆபத்து
25 வருடங்களுக்கு முன் அவள் ஒருவரை மணம் செய்ய விரும்பினாள். எனினும் அவர் மொனியரின் குடும்பத்திற்கு ஏற்றவராக இருக்கவில்லை. எனவே அவள் அவரை திருமணம் செய்ய அவளின் தாய் மறுத்து விட்டாள். வேறு ஒருவரை திருமணம் செய்ய கூறினார். அதனை மொனியர் மறுத்ததால் அவளுடைய தாயும் சகோதரனும் அவளை சங்கிலியால் பிணைத்து அறையில் அடைத்து வைத்தனர். கல்வி கற்பதற்காக ஐக்கிய இராச்சியத்திற்கு அவள் சென்று விட்டதாக அவளுடைய நண்பர்களிடமும் உறவினர்களிடமும் கதை பரப்பி விடப்பட்டது. உணவு உண்ணல், இயற்கைத் தேவைகளை நிறைவேற்றுதல் என்பன அந்த அறையினுள்ளேயே அவள் மேற்கொள்ள வேண்டியிருந்தது. சில வருடங்கள் சென்ற பின் அவள் ஐக்கிய இராச்சியத்திலேயே திருமணம் முடித்து தங்கி விட்டாள் என்று கதை பரப்பி விடப்பட்டது. மொனியர் காதலித்தவர் இறந்த பின் கூட அவள் வெளியே விடப்படவில்லை.
விசாரணை
மொனியர் அடைத்து வைக்கப்பட்ட விடயம் பின்னர் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மொனியரின் குடும்பத்தைச் சேர்ந்த அனைவரும் விசாரிக்கப்பட்டனர். மொனியரின் தாய், சகோதரன் ஆகியோர் குற்றவாளிகளாக இனங்காணப்பட்டனர். எனினும் மொனியரின் தாய் சிறையிலடைக்கப்பட்டு 15 நாட்களின் பின் உயிரிழந்தாள். அவளுடைய சகோதரனோ இவற்றிற்கெல்லாம் காரணம் தனது தாயே என குற்றம் சாட்டினான். எனினும் அவனுக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டணை வழங்கப்பட்டது.
மொனியரின் இறுதிக் காலம்