ஸ்கேன்டிநேவியாவுக்கும் இஸ்லாமிய உலகிற்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டமை பற்றிய ஆதாரமொன்று ஆய்வாளர்களுக்கு கிடைத்துள்ளது.
சுவீடன் கல்லறையொன்றில் கி.பி 1872 - 1895 காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியில் மோதிரமொன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் கியுபிக் வடிவ அறபு எழுத்துக்கள் காணப்படுகின்றன. அல்லாஹ்வுக்கு அல்லது அல்லாஹ்வுக்காக என்ற கருத்தில் இந்த எழுத்துக்கள் அமைந்துள்ளன. இந்த மோதிரம் வைக்கிங் இனத்தவர்கள் காலத்திற்குரியது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடு சிதைவடைந்துள்ளது. எனினும் இந்தக் கல்லறையில் கண்டுபிடிக்கப்பட்ட ஆடைகள் , ஆடைகளில் குத்தும் ஊசி மற்றும் ஆபரணங்களை வைத்து இது ஒரு பெண்ணின் கல்லறை என்று கருதப்படுகின்றது.
சுவீடனின் Birka நகரில் அமைந்துள்ள இந்தக் கல்லறையானது சுவீடன் தலைநகர் ஸ்டொக்ஹோமிலிருந்து 15.5 மைல் தெலைவில் அமைந்துள்ளது.
ஸ்கேன்டிநேவியா என்பது சுவீடன், டென்மார்க்,நோர்வே ஆகிய நாடுகளைக் குறிக்கின்றது.