உக்ரேனின் டொன்பாஸ் பகுதியில் மோதலில் ஈடுபட்டிருக்கும் ரஷ்ய ஆதரவு படைக்கு உதவுவதற்காக தன்னார்வலர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார் புட்டின். இந்த அழைப்பில் வெளிநாட்டு தன்னார்வலர்களும் உள்ளடக்கம். 16000இற்கும் மேற்பட்டவர்கள் தன்னார்வமாக போரிடுவதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும் இவர்களுள் அதிகமானவர்கள் மத்திய கிழக்கைச் சேர்ந்தவர்கள் என்றும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளதாக அறிய முடிகிறது.