காலை 6 மணியளவில் தொலைக்காட்சியில் தோன்றிய புட்டின் உக்ரேனை தாக்குவது சம்மந்தமாக அறிவித்தல் விடுத்தார்.
பீரங்கித் தாக்குதல் மற்றும் வான்வழி தாக்குதல் ஆரம்பித்தவுடன் இது தொடர்பாக உக்ரேன் வெளிவிவகார அமைச்சர் ரஷ்யாவை குற்றம் சாட்டினார்.
ரஷ்யா தரை வழியாக உக்ரேனை பல வழிகளில் தாக்கியது.
கியிவ் நகரத்தின் வடக்குப் பகுதியால் நுழைந்த ரஷ்யப் படைகள் உக்ரேனின் நிலைகளைத் தாக்கியது.
ஹெலிகொப்டர் மூலமாக தாக்குதலைத் தொடர்ந்து கியிவ் புறநகர்ப் பகுதியிலுள்ள வான் தளம் ரஷ்யாவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.
கூடியளவிலானோர் உயிரிழந்ததாக செஞ்சிலுவைச் சங்கம் அறிவித்தது.
உக்ரேனின் 11 வான் தளங்கள் உட்பட 70 இராணுவ இலக்குகளை அழித்ததாக ரஷ்யா அறிவித்தது.
உக்ரேனின் கிழக்குப் பகுதியில் ரஷ்ய ஆதரவு படைகள் முன்னேறி வருவதாகவும் பிரதேசங்களைக் கைப்பற்றுவதாகவும் ரஷ்யா அறிவித்தது.
மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றம் என Organization for Security and Cooperation Europe அமைப்பின் போலந்து தலைவர் குற்றம் சாட்டினார்.
மொஸ்கோவின் பாதுகாப்பு சம்மந்தமான நியாயமான அவதானம் சம்மந்தமாக புரிந்து கொள்வதாக சீனா அறிவித்தது.
உக்ரேனில் மார்ஷல் சட்டம் அமுல்படுத்தப்பட்டது.
போலந்தானது உக்ரேனின் எல்லைப் புறத்தில் உக்ரேனிலிருந்து ஊடுருவும் அகதிகளுக்காக ஒன்பது நிலையங்களை திறந்தது.
தமது நாடு உக்ரேன் மீதான படையெடுப்பில் கலந்து கொள்ளவில்லை என பெலாரஸ் அறிவித்தது. எனினும் உக்ரேன் மீதான தாக்குதலுக்கான ஆரம்ப தளமாக பெலாரஸ் பயன்படுத்தப்படுவதற்கு அனுமதித்தமைக்கு பெலாரஸிற்கு பிரான்ஸ் குற்றம் சாட்டியது,
உக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பிற்கு எதிரான ரஷ்யர்கள் ரஷ்யாவில் கைது செய்யப்பட்டார்கள்.